கனிமொழி கருணாநிதி கேள்வி? எதிர்கட்சிகளின் கூட்டணியால்! நாட்டின் பெயரையே மாற்றமளவுக்கு அச்சமா?
- உறியடி செய்திகள்

- Sep 7, 2023
- 1 min read
Updated: Sep 9, 2023

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
இந்தியா என்ற பெயரை மாற்றும் நிலைக்கு, பா.ஜ.வுக்கு, எதிர்கட்சிகளின் இந்திய கூட்டணி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!
மோடி அரசு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது” : கனிமொழி கருணாநிதி விமர்சனம்!
எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி நாட்டினுடைய பெயரையே மாற்றும் அளவிற்கு பாஜகவினரை பயமுறுத்துகிறது என கனிமொழி கருணாநிதி, எம்.பி விமர்சித்துள்ளார்.!
நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்து மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் மற்றும் வானவில் அறக்கட்டளை 8 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வறிக்கை குறித்த ஆய்வுரங்கம், வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது!.
இதில் தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் குழு துணைத்தலைவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டார்.!

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., “அரசியில் குரலை எழுப்பகூடிய எண்ணிக்கையில், அவர்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை இல்ல என்ற நிலை தான் உள்ளது. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தார்.!
இன்று உள்ள தமிழ்நாடு அரசு என்பது அனைத்து மக்களுக்குமான அரசாக உள்ளது. அதிகாரிகள் செய்யவேண்டும் என நினைத்து அதிகாரத்தில் உள்ளவர்கள் போராடும் போதே கடினமான நிலையுள்ளது. சாதாரண மக்கள் என்றால் வாழ் நாள் முழுவதும் போராட வேண்டி உள்ளது. இதில் அவர்களுக்கு பெரிய தடை உள்ளது.!
எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்பட தான் இது போன்ற செயல்பாடுகள் வேண்டும். கலையப்படவேண்டிய குழப்பங்கள் உள்ளன அந்த புரிதல் நமக்கு வேண்டும். நிச்சயமாக என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கான குரலாக !.
உங்கள் ஆய்வுகளை தமிழ்நாட்டின்முதல்வர் தளபதியார் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பேன்;!
இன்றைய தமிழ்நாடு அரசு எல்லோருக்குமான எல்லோரையும் அரவணைத்து மக்களுக்கான தேவை எல்லாவற்றையும் உருவாக்கத்தரவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான்திராவிட மாடல்அரசாக மக்கள்நலப்பணிகளை, தொலை நோக்கு பார்வையோடு நிறைவேற்றிடும்வகையில்செயலாற்றி வருகின்றது.!
உலக அளவில், தமிழ்மொழி. தமிழர்கள், தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், இன்று அனைவருடைய ஏற்புடைய கருத்துக்களாக பேசப்பட்டு வருகின்றது. இதனால் தமிழர்கள் உலகமுழுவதும் அறியப்பட்டு அவர்களின் தன்மானம், சுயமரியாதை உயர்ந்து காணப்படுகின்றது! இந்திய துணைகண்டத்திற்கும் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.!
தமிழ்நாட்டோடு இல்லாமல் இந்திய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். இந்தியா என்பதா? என்பதிலேயே பலருக்கும் குழப்பம் உள்ளது! ஆனால் நமக்கு என்றும் இந்தியா தான்.!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி
, “இந்தியா என்ற பெயரை மாற்ற எண்ணி ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்கள்! இதனால் பன்முகத்தன்மை, இந்திய கலாச்சாரம், பண்பாடுகள், கேள்விக்குள்ளாகியுள்ளது!
எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாட்டினுடைய பெயரையே மாற்றும் அளவிற்கு அவர்களை பயமுறுத்துகிறது” என்று கூறினார்.!




Comments