மனம் தளராத காரல்மார்க்ஸ்! மார்க்ஸிஸ்ட் கொள்கை வேந்தர்!! பயிரில் பதர்களும் இருப்பதுவே தனையே!!
- உறியடி செய்திகள்

- Nov 6, 2022
- 1 min read

மார்க்ஸிஸ்ட். சி.பி.எம்.கட்சியின் கொள்கைக்கு எடுத்துகாட்டு. இன்றும் எல்லோரும் அப்படியா என கேட்டு நெஞ்சில் .குத்தாதீர்கள் எங்களிலும் அற்ப மனம் படைத்தோர் இருக்கலாம், பதர் யில்லாத பயிர்கள் உண்டா?
கொள்கையை ஏந்தி நிற்ப்போரின் குமுறல்!
வலைதளங்களில் வலம்வரும் மிக சிறந்த கருத்து கட்டுரை......
பிழைக்க தெரியாதவர் சார் இந்த மார்க்ஸ்!
காரல் மார்க்ஸ் அவர் தந்தை இருவரும் நண்பர்கள் போல் இருந்தனர். எந்த காலத்திலும் ஜென்னியை கை விட்டு விடாதே என்று எந்த தந்தை சொல்வார். அந்த அளவுக்கு வரும் மருமகளை கணித்தவன் எவன். ஜென்னி பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தாலும் மார்க்ஸின் ஆராய்வுக்கு எந்த வகையிலும் தடையாக இருந்தவர் இல்லை. ஒரு குழந்தை இறந்த போது அடக்கம் செய்வதற்கு சவபெட்டி செய்ய கையில் காசில்லை. வீட்டின் பின் குழி தோண்டி புதைத்தார்கள். அப்போது தான் மார்க்ஸ் ஆடி போய் விட்டார். ஜென்னி அவரை தன்னம்பிக்கை கொடுத்து ஆராய்ச்சியை தொடர வைத்தார்.

ஊரில் பஞ்சம் வந்தால் கையேந்தி பணம் வசூலித்து அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு வெறும் கையோடு வீட்டுக்கு வருவார் கர்ணன் காரல் மார்க்ஸ். ஜென்னி முகம் மாறி பேசியதில்லை.
தந்தை மறைவுக்கு பின் தாயார் சொத்துகளை பிரித்து கொடுக்க மார்க்ஸை அழைத்தார். சகோதரர்கள் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள் தங்களுக்கு போதாது என்று. தாயார் மனது கஷ்டப்படும் என்று இவர் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அப்போது அவர் தாயார் சொன்னது மார்க்ஸுக்கு பணத்தை பற்றி எல்லா விசயங்களும் தெரியும் சம்பாதிக்க தெரியாது என்று.
அது அவர் மார்க்ஸுக்கு கொடுத்த அங்கீகாரம் தானே தவிர மார்க்ஸ் நினைத்தால் சம்பாதிக்க முடியும் என்பதை உள்ளடக்கிதானே சொல்லியுள்ளார். ஏங்கல்ஸ் கூட இவன் சம்பாதிக்க மாட்டான் என்று தானே பணத்தை வங்கியில் போட்டு வட்டி மட்டும் மார்க்ஸுக்கு கிடைக்கும் மாறு செய்தாரே அன்றி பணத்தை மார்க்ஸ் கையில் கொடுக்க வில்லை.
அவர் பெயரில் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா ( மார்க்சிஸ்ட் ) CPM என உழைக்கும் வர்கத்தின் கீழ் பணியாற்றுவதை பெருமையாக கொள்கிறோம்.
சம்பாதிக்க தெரியும் எங்களுக்கு, ஆனால் அடுத்தவன் வயிற்றில் அடித்தல்ல!
மார்க்ஸ் மாதிரி வறுமையில் வாடி இறப்பதையே பெருமையாக கொள்கிறோம்.
எல்லோரும் அப்படியா என்று நெஞ்சில் குத்தாதாதீர்கள்!
அற்பமான மனது படைத்தோர் எங்களிலும் இருக்கலாம்.
பதர்கள் இல்லாத பயிர்கள் உண்டா? எல்லோரும் மார்க்ஸ் ஆகிவிட முடியாது.
கட்டுரையாளரின் கருத்துக்கு சிலர் (பலர்) சாதி, மதம். கட்ட பஞ்சாயத்து, ஆதிக்கஅடக்குமுறை, சுயநலன்,என்று தனிமனிதசுயநலத்துடன் சமூகத்தில் மார்க்ஸிஸ்ட் எனும் பசும் தோலை போர்த்தியவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.....
என்பதுவேதனையிலும் வேதனையே!
இந்த பதிவு எவரையும் காயப்படுத்த அல்ல!
மார்க்ஸிஸ்ட் கொள்கைகளால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் கிடைக்க!
மீள்பதிவு........
வழக்கறிஞர் எ.ரெகுபதி




Comments