கார்நாடகா தேர்தல்: வென்றதுமாஜி,ஐ.ஏ.ஸ். சசிகாந்த் வியூகம்! மாஜி ஐ.பி.எஸ்.அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு!
- உறியடி செய்திகள்

- May 14, 2023
- 2 min read

மாஜி கர்நாடகா மாநில ஐ.பி.எஸ்.அதிகாரி தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை அரசியல் வியூகம் என்னதான் ஆச்சு! தேர்தல் பணிகள் அண்ணாமலை கிளீன்போல்டா!!
ஆட்டநாயகனா காங்கிரஸில் இணைந்த மாஜி ஐ.ஏ.ஸ்.சசிகாந்த்!!
கலாக்கும் நெட்டிசன்கள். அரசியல் விமர்சகர்கள்!!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த் தான் வெற்றிபெற்றுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 64 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 137 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
சசிகாந்த் செந்தில்:இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி நிர்வாகி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பணியாற்றினார்.
சென்னையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். 2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்டது. உதவி ஆணையராக இவர் பணியாற்றினார்.
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த போது பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
அதோடு காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார். அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது. தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார். முக்கியமாக கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.
இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. இன்னொரு பக்கம் அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த்தான் வெற்றிபெற்றுள்ளார்.
கர்நாடகாவில் எஸ்பி மற்றும் கூடுதல் எஸ்பியாக இருந்தவர் அண்ணாமலை. கர்நாடக அரசியல் தலைவர்கள்.., அதாவது எடியூரப்பா போன்ற தலைவர்களுக்கு இந்த தேர்தல் முத்தேய்வு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது முக்கியமான தேர்தல். இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் என்றாலும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அங்கே தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அரசியல் ரீதியாக அண்ணாமலை இதுவரை தன்னை நிரூபிக்கவில்லை. இந்த தேர்தலில்தான் அவர் தனது பலத்தை நிரூபிக்க முடியும் என்பதால் அவரின் தேர்தல் பணிகள் தீவிரமாக கவனிக்கப்பட்டது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு கடந்த ஒன்றரை மாதமாக பணிகளை செய்தார். வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகளை முடிவு செய்தது உட்பட பல விஷயங்களில் அண்ணாமலை முக்கிய முடிவுகளை எடுத்தார்.
இந்த தேர்தலில் வென்று தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கு ஏற்பட்டு இருந்தது. ஆனால் பாஜக அங்கே எதிர்பார்த்ததை விட மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.
மாஜி ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை நேரடி அரசியலுக்கு வந்த குறுகிய காலத்தில், தமிழ்நாடு பா.ஜ. தலைவராக பணியாற்றி வந்தவர், அவ்வப்போது ஊடகங்களின் வாயிலாக, திடீர் பரபரப்பு அரசியல் விமர்சனங்களை வெளிபடுத்தி பேசும் பொருளாக்கி தமிழக அரசியல் களத்தை பா.ஜ. மேலிடமும் ரசித்து வந்தாக கூறப்படுகின்ற நிலையில், கர்நாடாகவில் அண்ணாமலை பொருப் போற்று பணியாற்றிய பகுதிகள் பா.ஜ. சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லாமல் போனது பா.ஜ.வுக்கு மட்டுமல்ல. அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தினையும், பெருத்த பின்னடைவாக பார்க்க வேண்டியதாகவே உள்ளது. என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள் பலரும்!




Comments