கர்நாடகா இஸ்லாமியர் இடஒதுக்கீடு! தேர்தல் விளையாட்டிலா!! பா.ஜ.க.!!!
- உறியடி செய்திகள்

- Apr 26, 2023
- 1 min read

இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து; கர்நாடக அரசின் முடிவுக்கு `செக்' வைத்த உச்ச நீதிமன்றம்!
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 165 தொகுதிகளில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத், ஒக்கலிகா சமூக மக்கள் இருக்கின்றனர்.
இட ஒதுக்கீடு விவகாரத்தில், பா.ஜ.க-மீது கடும் அதிருப்தியிலிருக்கும் இந்த இரண்டு சமுதாய மக்களைச் சமரசப்படுத்தி, வாக்கு வங்கியை தக்கவைக்க, பா.ஜ.க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மார்ச் மாதம், '2B பிரிவின் கீழ் இஸ்லாமியர்கள் இதுவரை பெற்று
வந்த 4% தனி இட ஒதுக்கீடு ரத்துசெய்யப்படும். மாற்றாக,
இந்த 4% இட ஒதுக்கீடு ஒக்கலிகா, லிங்காயத் சமுதாய மக்களுக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும்என அதிர்ச்சிக்குரிய உத்தரவை வெளியிட்டது. மே, 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் களத்தில் இந்த உத்தரவு அனலைக் கிளப்பியது.

இதையடுத்து, 'ஒக்கலிகா, லிங்காயத் மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக மொத்த மக்கள்தொகையில், 13% இருக்கும் இஸ்லாமிய மக்களின் உரிமையைப் பறித்திருக்கிறது பா.ஜ.க அரசு'இஸ்லாமிய மக்களிடையே பா.ஜ.க-மீது கடும் அதிருப்தி அலை உருவானது.
மறுபுறம், 'இஸ்லாமிய மக்களின் இட ஒதுக்கீட்டைப் பிரித்துத் தருவதாக இருந்தாலும், நாங்கள் கேட்ட கோரிக்கை நிறைவேறவில்லை' என ஒக்கலிகா, லிங்காயத் மக்கள் பா.ஜ.க-மீது அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனாலும், பா.ஜ.க அரசு, 2B பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய தீவிரம் காட்டிவருகிறது.இந்த முடிவுக்கு எதிராக பல அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் மார்ச், 13-ம் தேதி, 'வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல், 25-ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை கர்நாடகா அரசு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது' என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இன்று, 25-ம் தேதி காலை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் விசாரணை நடத்தி, ''மே, 9-ம் தேதி வரையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை, கர்நாடகா அரசு இட ஒதுக்கீடு ரத்து உத்தரவை அமல்படுத்தக் கூடாது' என உத்தரவிட்டிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம்
இதனால், இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். மேலும், தேர்தலுக்கு முன்பு, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டு ரத்து உத்தரவை பா.ஜ.க அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன், தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை இழந்தால் எதிரணியினர் இந்த இட ஒதுக்கீட்டு திட்டத்தை ரத்துசெய்வார்கள் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரப்பப்பாக பேசப்படுகின்றது.




Comments