கரூர்:கனிம குவாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு! அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு தடுக்கப்படுமா!!
- உறியடி செய்திகள்

- Jul 4, 2023
- 4 min read

கரூர் மாவட்டத்தில் அனைத்து விதமான அரசு நிலம், தனியார் நிலங்களிலுள்ள கனிம குவாரிகளையும் ட்ரோன் மூலம் ஆய்வு செய்து, குவாரிகளின் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.40. ஆயிரம் கோடியை உறுதிபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கரூர் காலக்டர் த.பிரபுசங்கருக்கு சரி மாரி கேள்வி! சமூக ஆர்வலர்கள் அதிரடி!
கரூர் மாவட்டத்தில் இனியாவது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்!!!
கரூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற, வாரந்திர மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம். காவிரியாற்று பாதுகாப்பு இயக்கம் ஆகிய வற்றின் சார்பில், அதன் நிர்வாகிகளோடு,சமூக ஆர்வலர் ச.முகிலன் நேரில் கொடுத்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையின் மீது, கடந்த 2 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், பல்வேறு. ஆதாரங்களுடன் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வாராந்திர குறைதீர் கூட்டத்தில், வாட்ஸ் அப் மூலம் என சட்டம் சொல்லும் வழிகளில் எல்லாம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், சாமானிய மக்கள் நலக் கட்சி உட்பட பல்வேறு மக்கள் நலன் பேனும் அமைப்புகள், அனைத்து குவாரி களையும் டிஜிட்டல் முறையில் டிரோன் மூலம் ஆய்வு செய்யக் கோரியும், அவ்வாறு செய்தால் அரசுக்கு கரூர் மாவட்டத்தில் மட்டும் 40,000 கோடி வரை கிடைக்கும் எனவும் தெரிவித்து வருகிறோம்.!

தாங்களும், 2021 ஆம் ஆண்டில் 2 முறை கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அறிவித்தீர்கள். நாங்களும் அதை வரவேற்றோம்.!

ஆனால், கரூர் மாவட்ட நிர்வாகம் நேர்மையாக செயல்படவில்லை.!
கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் குவாரி உரிமையாளர்களை பாதுகாத்து வருகிறது. என்பதை நேரடியாகவே பலமுறை உங்களிடம் தெரிவித்தும் வந்துள்ளோம் என்பதை மீண்டும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.!

கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் குவாரி உரிமையாளர்களை நடவடிக்கை எடுக்காமல் பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்ததன் காரணமாக, குவாரி உரிமையாளர்களால் விவசாயி ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்டார்.
இன்று கூட கரூர் நன்னியூர்/மல்லம்பாளையம் அரசு
மணல் குவாரிகளில் சேகர் ரெட்டி - திண்டுக்கல் ரத்னம் அடியாட்களின் கட்டுப்பாட்டில் சிசிடிவி கேமரா கூட வேலை செய்ய விடாமல் தடுத்து,
மணல் குவாரிகளுக்கு அனுமதி இல்லாத இடத்தில், சட்டவிரோதமாக இரவு பகலாக, 2 பொக்லைனுக்கு பதில் 6-க்கு மேற்பட்ட பொக்லைன் இயந்திரத்தை வைத்து, காவிரி ஆற்றில் மணல் குவாரி இருக்கும் இடத்தில் திண்டுக்கல் ரத்னம் அடியாட்களால் ராணுவ கட்டுப்பாட்டு பகுதி போல் ஆக்கப்பட்டு
சட்டவிராதமாக இயங்கி வருகிறது.!
இது போலவே , பல்வேறு விதிகளை மீறி செயல்பட்டு வந்த
விழுப்புரம் ஏனாதிமங்கலம் மணல் குவாரி, 30-06-2023 அன்று நீதிமன்றத்தால் இயங்க தடை செய்யப்பட்ட நிலையில்,
சட்டவிராதமாக இயங்கி வரும் நன்னியூர்/மல்லம்பாளையம் அரசு
மணல் குவாரி மீது நடவடிக்கை எடுப்பீர்களா என தெரியவில்லை. நீதிமன்ற தீர்ப்பு வந்தால்தான் நடவடிக்கையா எனவும்த் தெரியவில்லை.!

, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்களின் செயல்முறைகள்: ந.க.அ2/2975/2022 என
டிஆர்ஓ - ஆர்டிஓ- வட்டாட்சியர் - உதவி இயக்குனர் (நில அளவை பதிவேடுகள் துறை) - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் - காவல் ஆய்வாளர் ஆகிய குழுவை அமைத்து ஆய்வு செய்ததாக தற்போது தெரிவித்து உள்ளீர்கள்.
ஆனால் கனிமவளக் கொள்ளையின் மீது மேற்கண்ட நடவடிக்கை பற்றி, இது தொடர்பான தகவலை கோரி தங்களிடம், கனிமவளத்துறை - வருவாய்த்துறை ஆகியோரிடம் மனுக்கள் மற்றும் ஆர்டிஐ மூலம் கேட்டும் இதுவரை தகவல் தர மறுத்து வருவதோடு, மேலிடத்திலிருந்து தரக்கூடாது என கனிமவளத்துறை இயக்குனர் என்னிடம் நேரில் பலமுறை தெரிவித்ததை, தங்களிடம் வெளிப்படையாகவே பலமுறை தெரிவித்தும் தாங்கள் அதை பெற்று தர முயற்சிக்காமல் ஏதோதே பேசி கடந்து செல்வதும் - கனிமம் தொடர்பாக பதில் கூறாமல் தவிர்த்து வந்ததுமே இதுவரை நடந்து வந்துள்ளது.!

நீதிமன்றம் தவிர, சட்ட அடிப்படையில் அனைத்து குவாரி களையும் மாதம்தோறும் வருவாய்த்துறையினர் (ஆட்சித்தலைவர்:5 குவாரி, டிஆர்ஓ-10 குவாரி, கோட்டாச்சியர்:25%, வட்டாச்சியர்:50%, வருவாய் ஆய்வாளர்:75%,, கிராம நிர்வாக அலுவலர் அனுமதி பெற்ற -அனுமதி முடிந்த
:100%) குவாரிகளையும்
நேரடியாக ஆய்வு செய்ய அரசாணை:19/2022 என (பிப்ரவரி-2022) உத்தரவிட்ட நிலையில், அதையும் கரூர் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தவிலை.
நீதிமன்ற உத்தரவுப்படி பிறப்பிக்கப்பட்ட அரசாணை:135/2009-ன்படி
கனிமவளக் முறைகேடுகள் அதிகாரிகள் கண்டறிந்தது, மற்றும் கனிமவளக் முறைகேடுகள் புகார்கள் மீது வட்டாச்சியர் தலைமையிலான (கன்வீனர்) வட்ட கண்காணிப்புக் குழு(கனிமம்) 15 நாட்களுக்கு ஒரு முறையும், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக் குழு (கனிமம்) மாதம் ஒருமுறையும் கூடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கரூர் மாவட்டத்தில் நடைமுறையே படுத்தவில்லை.!

கரூரில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல, சட்டவிரோதமாக 3 ஆண்டுகள் இயங்கியதால் குவாரியிலேயே மிகப் பெரும் படுகொலையாகி அம்பலமான குப்பம் என்டிசி கல்குவாரி, விவசாயி ஜெகநாதன் உயிரைக் கொடுத்து போராடி மூடிய 7 ஆண்டு சட்டவிரோதமாக இயங்கிய குப்பம் செல்வகுமார் கல்குவாரி (அன்னை புளூ மெட்டல்) உட்பட எதன் மீதும் இதுவரை நடவடிக்கையே இல்லை என்பதுதான் எதார்த்தம்.!
சமூக சொத்தை பாதுகாக்கும் எங்களைச் போன்றோர், தாக்குதலுக்கும் - படுகொலைக்கும் பொய் வழக்குகளுக்கும் உள்ளாகி வரும் நிலையில், உயிரை பணயம் வைத்து நாங்கள் திரட்டி தரும் கனிமவள முறைகேடு ஆதாரங்களின் மீது தாங்கள் நடவடிக்கையே
எடுக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.!
வருமானவரித்துறை யால் கரூரில் ஆய்வு செய்யப்பட்ட கணேச முருகன் கல்குவாரி (மகா புளூ மெட்டல்) நிறுவனம், இயங்கக் கூடாத அரசு விடுமுறை நாளான மே 1-ல் (01-05-2023) இயங்கி, சட்டவிரோதமான முறையில் வெடிமருந்து பெற்று, பயிற்சி இல்லாத வெடிவைப்பாளரை வைத்து வெடிவைத்து, வீட்டில் 40 பேர் கூடியிருந்த நிலையில் வீட்டின் மேலும் வாசலிலும் கற்கள் விழுந்து அனைவரும் உயிர் தப்பியது தொடர்பாக, தங்களிடம் நேரில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை. காவல்துறையோ நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்று பதில் கொடுத்து உள்ளனர்.!

கனிமவளக் கொள்ளையின் மீது கரூர் மாவட்டத்தில் உள்ள 335 குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றம் டிசம்பர்-2021ல் உத்தரவிட்ட நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததினால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதன் மீது CONT.P.(MD).No.226 of 2023 வழக்கு தொடரப்பட்டது.
அதன் பின்பே கரூர் மாவட்ட ஆட்சியராக உயர்நீதிமன்றத்திற்கு தாங்கள் CONT.P.(MD).No.226 of 2023 வழக்கிற்கு ....06.2023
(நாள் குறிப்பிடப் படவில்லை)
அவமதிப்பு வழக்கு தொடர்பாக, தற்போதைய நிலை பற்றிய அறிக்கை (STATUS REPORT FILED BY THE FIRST RESPONDENT) தாக்கல் செய்துள்ளீர்கள்.!

கரூர் மாவட்டத்தில், இயங்கி வரும் அனைத்து கல்குவாரிக்கும் டிஜிட்டல் ஆய்வு அரசு நடத்த தொடங்கிய நிலையில் அதை தடுக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு,
கரூர் மாவட்டத்தில் சுமார் 500 ஊர் மக்களை அகதிகளாக்க வெளியேற்ற வேண்டும்- எந்த சட்டவிதிகளையும் மதித்து செயல்பட மாட்டோம் என்ற கெடுநோக்கத்தோடு, சட்டவிரோதமான - இயற்கை விரோதமான கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு கல்குவாரி ஒப்பந்தகாரர்கள் - கிரசர் உரிமையாளர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் என்ற பெயரில் அரசின் டிஜிட்டல் சர்வேயை தடுத்து நிறுத்த போலி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் தாங்கள் கடந்த 30-06-2023 அன்று 12 குவாரிக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக தாங்கள் தெரிவித்துள்ளீர்கள்.!

2021-ல், கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் 2. அறிவிப்பு அறிக்கையில் அறிவித்தீர்கள்.
ஆனால் தற்போது கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் கசிய விடுவது போல் 12 குவாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்ட செய்தியை தெரிவித்து, எவ்வித விளக்கமும் தாங்கள் தெரிவிக்கவில்லை.!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கினால், அவசர அவசரமாக 12 குவாரிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது என்றே அனைவராலும் கருதப்படுகிறது.
மேலும் அபராதம் விதிக்கப்பட்ட, ஆய்வு செய்யப்பட்ட எந்த குவாரியும் டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்யப் படவில்லை. (
23 கோடி அபராதம் விதிக்கப்பட்ட,
என்ஜிடி உத்தரவுப்படி ஒரு கல்குவாரி மட்டும் டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்யப்பட்டது)
கரூர் மாவட்டத்தில் 300 குவாரிகளுக்காக 500 கிராம விவசாய மக்களை அகதிகளாக மாற்றக் கோரி, அடாவடி கோரிக்கை வைத்து போராடும் கல்குவாரி ஒப்பந்தகாரர்கள் & கிரசர் உரிமையாளர்களின் அராஜக கோரிக்கை போராட்டத்தை அரசு புறக்கணிக்க வேண்டும்!
கொதிப்பது அடங்க எரிவதை பிடுங்க வேண்டும் என்பது போல், எம்.சாண்ட்க்கு மாற்றாக வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய வேண்டும்!!


கரூர் மாவட்டத்தில், இயங்கி வரும் மற்றும் அனுமதி முடிந்த 335 அனைத்து கல்குவாரிக்கும் டிஜிட்டல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசின் டிஜிட்டல் ஆய்வை எதிர்த்து அரசு நிலத்தில் இயங்கி கொண்டுள்ள அனைத்து குவாரி அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்!!
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரால்,அபராதம் விதிக்கப்பட்ட 11 கல்குவாரிகளையும் டிஜிட்டல் முறையில் மீண்டும் மறுஆய்வு செய்து அபராதம் விதிக்க வேண்டும்!!!
கல்குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சட்டப்படி கொடுக்க வேண்டும்!
கரூர் மாவட்டத்தில் இனியாவது, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்!!!
இவ்வாறு முகிலன் கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
.. திருச்சி வின்ஸி......




Comments