கரூர்: பிளஸ்- 2. தேர்வு மையங்களில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நரேஸ் அதிரடி ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Mar 14, 2023
- 2 min read

முதல்வர் உத்தரவு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டத்தில், இணை இயக்குநர் அதிரடி, திடீர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில், தி.மு.கழகதலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொருப்பை ஏற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை முதல் கல்லூரி கல்வி வரை ஏழை - எளிய அடக்கி ஒடுக்கப்பட்ட இனமக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரின் கல்வி தகுதி மிகப்பெரிய அளவிலான வளர்ச்சிப் பெற்றுள்ளதோடு, இந்திய ஒன்றியத்தில் கல்வி தகுதியில் தமிழ்நாடு முன்னிலையில் திகழுகின்றது என்றால் அது மிகையில்லை.....


தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தந்து உயர்கல்வியில் பெண்கள் உள்ளிட்டவர்கள் பயன்பெறும் வகையில், நிதி உதவி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொலைநோக்கு பார்வையோடும், சிந்தனையோடும்,வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவைகளில் நல்வழிகாட்டியாக பள்ளிக்கல்வி, உயர்கல்வியில் தாயுள்ளத்துடன் தனி கவனம் செலுத்தி துறையின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருவதும் இத்தகைய கல்வி வளர்ச்சியே, முன்னேற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக கல்வி, சமூக ஆர்வளர்கள் வட்டாரத்தில் பாரட்டி பேசப்படுகின்றது.



பள்ளிக்கல்வியின் வளர்ச்சிக்கும், அனைவருக்கும் கல்வி எளிதாக கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள், பள்ளிக்கல்வித்துறையை முடுக்கிவிட்ட நிலையில், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருவது மேலும் ஒரு மைல்கல் மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய முத்தாய்ப்பான திட்டம் என்றே அனைவராலும் பாராட்டப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று பிளஸ்- 2, தேர்வு தொடங்கியது, இதில் சுமார் 8, 3/4 லட்சம் மாணவ- மாணவியர்கள் தேர்வு எழுத தொடங்கினார்கள்.



தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படியும் சுமார், 4. ஆயிரம்பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக சுமார் 46. ஆயிரத்திற்கு மேற்பட்டேரும், பறக்கும் படை, நிலையான படையினராக சுமார் 4. ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி கரூர் மாவட்டத்தில் 11ஆயரத்து 377. மாணவ- மாணவியர்கள் தேர்வு எழுத மாவட்டம் முழுவதும், 43 தேர்வுமையங்களில் (
சுமார் 106. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு)ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தேர்வு மைய பணியில் 46. தலைமையாசிரியர்கள்- 46, துறைசார் அதிகாரிகளும்முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், அறைகண்காணிப்பாளர்களாக 793,ஆசிரியர்களும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ்காவல் போடப்பட்டிருந்தது.


இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ் லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி, அய்யர்மலை, குளித்தலை (மகளீர் ) வெள்ளியணை, காணியாளம்பட்டி, தரகம்பட்டி, தோகமலை உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடைபெறும் மையங்களில் திடீர், அதிரடி ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டார். அப்போது தேர்வு அறை சுகாதாரம், காற்றோற்ற வசதி, குடிநீர் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் - பறக்கும் படையினர், நிலையான படையினர் கண்காணிப்புப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்வு தொடங்கும் முன்னரும், தேர்வு முடிந்தபின்னரும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட தேர்வுப் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதுறை அலுவலர்களுக்கு, அறிவுறுத்தல்கள் தேர்வை சிறப்பாக நடத்துவதற்க்கான ஆலோசனைகளையும் கூறிய இணை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறையின் பிளஸ்-2 தேர்வுப் பணிகளை தமிழ்நாட்டு முதல்வர் நேரடியாக கண்காணிப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கிய தேர்வுக்கு குறிய வழிகாட்டுமுறைகளை முழுமையாக பின்பற்றி, முறைகேடுகள், ஏதேனும் தவறுகள் நடக்கா வகையில் விழிப்புடனும், மிகுந்த கவனத்துடனும் தேர்வுப் பணிகளில் அனைவரும், முழுமையாக கூடுதலாக ஈடுபடுத்தி பணியாற்றவும் கேட்டுக் கொண்டார்.
உதவி திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொணடு, ஆய்வுப் பணிகளில் உடன் சென்றார்கள்.




Comments