கரூர்எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை!கள்-வெளிமாநில மதுவிற்பனை! குண்டர் சட்டம். கடும் நடவடிக்கை பாயும்!
- உறியடி செய்திகள்

- May 16, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா.....
சட்டவிரோதமாக, கள் இறக்கி விற்பனை - வெளிமாநில மது விற்பனை போன்றவற்றில் ஈடுபடுவோர் யாராகயிருப்பினும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், கரூர் எஸ்.பி.எச்சரிக்கை!
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமது விற்பனை குறித்த சர்ச்சைகள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கரூர் எஸ்.பி.சுந்தரவதனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்பதாவது!
கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை கள் இறக்கி விற்பனை செய்வது, மேலும் சட்ட விரோதமாக வெளி மாநில மதுபாட்டுகளை வாங்கி விற்பனை செய்பவர்கள், கள்ளச்சாராயம் காட்சிபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் பற்றிய தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வகையில் 94981 00780 மற்றும் 04324-296299 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எவ்வித சமரசமுன்றி, தமிழ்நாடு முதல்அமைச்சர் உத்தரவின்படி கடும் எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.
தோகமலை - ராஜா....




Comments