கீழ்பவானி விவசாயிகள் உண்ணாவிரதம்! அமைச்சர் சு.முத்துசாமி பழரசம் கொடுத்துமுடித்து வைத்தார்!
- உறியடி செய்திகள்

- Jun 13, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
மே.13. 10. P.M.
கடந்த 7 நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு
அமைச்சர் சு.முத்துசாமி பழரசம் கொடுத்துமுடித்து வைத்தார்!
ஈரோடு மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயி சங்க விவசாயிகள் வாய்க்காலில் கான்கிரிட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர்கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த நிலையில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஈரோடு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இருதரப்பினரையும் அழைத்து பேசி சுமுகமாகமுடிவெடுத்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்து, போராட்ட பந்தலில் நேரிடையாக சென்று பழச்சாறு கொடுத்து விவசாய பெருமக்களை போராட்டத்தை கைவிட கோரினார். அவர்களும் கோரிக்கைகளை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர்!
.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி.....

கடந்த 7 நாட்களாக எல்.பி.பி. வாய்க்கால் பிரச்சனை சம்மந்தமாக விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்கள் கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத்தினர், இவர்களின் போராட்டத்தை சுமூகமாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டுமென்றும் கூறிவந்தார்கள்.
இந்த நிலையில், உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவரங்களை அரசுக்கு தெரிவித்து அனைவரும் ஒண்றிணைந்து அமர்ந்து பேசி நல்ல முடிவுக்கு வர முடிவு செய்யப்பட்டது. எனவே இந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டுள்ளார்கள். இதில் தொடர்புடைய விவசாயிகள் எங்கிருந்தாலும் அனைவருக்கும் நல்லதொரு முடிவு ஏற்படுத்தித்தர உரிய முயற்சிகள் எடுக்கப்படும்.

தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி அனைவரின் பிரச்சனைகள் கோரிக்கைகளை உடனுக்குடன் தனி கவனமெடுத்து அக்கரையுடன்தீர்த்து வைத்து, மக்களுக்கானப் பணிகளை முன்னெடுத்துவருகின்றார். அந்தவகையில் விவசாயிகள் தரப்பில் எவரும் பாதிக்காத வகையில் அரசோடு கலந்து பேசி, விவசாயிகளிடத்தில் நிச்சயம் பேசுவோம்.
இவ்வாறாக அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சுற்றுசூழல் அணி மாநில அமைப்பாளர் (அயல்நாடு வாழும் தமிழர்கள் வாரிய தலைவர்) கார்த்திகேய சிவசேனாபதி, விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தார்கள் .




Comments