சமூகவலைதலதகவலறிந்து,தூத்துக்குடியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு அடைக்கலம்! அமைச்சர் கீதாஜீவனுக்கு பாராட்டு
- உறியடி செய்திகள்

- Apr 11, 2023
- 1 min read

ஆசிரியர். மணவை, எம்.எஸ்.ராஜா
தூத்துக்குடியில் ஆதரவற்ற பாட்டி ஒருவரை தகவல் கிடைக்கப்பெற்ற சில நிமிடங்களில் சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு சென்னையிலிருந்தபடியஉரிய நடவடிக்கையினை துரிதமாக கொண்டு பாதுகாப்பு நடிக்கையினை எடுத்த அமைச்சர் கீதாஜீவனுக்கு பாராட்டுகள்!

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே ஆதரவற்ற பாட்டி ஒருவர் அங்கு வருவோர் போவோரிடம் கையேந்தியவாறு அமர்ந்திருப்பதாக வாட்சப் குழுமம் ஒன்றில் ஒருவர் செய்தியை பகிர்ந்து, சமூகநலத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.....
இந்தத் தகவல்
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் கலந்துகொண்டுவரும் நிலையில்,இந்தத் தகவல் தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் . கீதாஜீவன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த அமைச்சர் கீதாஜீவன் சென்னையில் இருந்தபடியே அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரை தொடர்பு கொண்டு உடனடியாக அந்தப் பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்திடவும், முதியோர் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்கவைக்கவும் அறிவுறுத்தல்கள்.இது ஆலோசனைகளை வழங்கியதுடன், தனி கவனத்துடன் வலியுறுத்தியும் கேட்டுக் கொண்டார்....

தகவல் கிடைக்கப்பெற்ற சில நிமிடங்களிலேயே அந்தப் பாட்டி தூத்துக்குடி பாசக்கரங்கள் இல்லத்தில் கொண்டு சேர்க்கப்பட்டார். சமூகநலத்துறை அமைச்சரின் இந்த துரித நடவடிக்கையை, தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பல்வேறு பொதுநல அமைப்பினர் தி.மு.கழகத்தினரும் - பெண்களும் வெகுவாக பாராட்டுகின்றனர்.
அமைச்சர் கீதாஜீவனின் மனிதநேய பண்பு, முதியோர்கள் மீது கொண்ட அக்கரையுடன் தனது கடமையுணர்ந்து துரித நடவடிக்கையிலை மேற்கொண்ட
இத்தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது...




Comments