குளித்தலை, கோட்டமேடு வனத்து சின்னப்பர் கோவில் விழா! திரளாக பக்தர்கள் பங்கேற்பு! கண்ணீர்மல்க வழிபாடு!
- உறியடி செய்திகள்

- Sep 1, 2023
- 2 min read

குளித்தலை கோட்டமேட்டில் புனித வனத்துச்சின்னப்பர் கோவில் விழாவான வேடிக்கை - தாரை தப்பட்டை முழங்க தொடங்கியது, விழா இறுதியில் முதல்அமைச்சர். அமைச்சர்கள், உள்ளிட்டவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.!
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கோட்டமேடு (கோட்டமேட்டுப்பட்டியில்) மதம் மாறிய பழங்குடியின கிறிஸ்தவர்களுள் ஒரு தரப்பு மக்களின், புலியூர் உள்ளிட்ட பங்காளி வகையறாக்களின் நிலைநிறுத்த ப்பட்ட, ......

இயேசு கிறிஸ்து சீடரருள் ஒருவரானன புனித வனத்து சின்னப்பருக்கு ஆதிகால , பழங்குடி முறையில், வழிபாடுகள்கடந்த பல நூற்றாண்டுகளாக நடத்தி வருவது வழக்கம் என்று கூறப்படுகின்றது!.
இந்த
பழமைவாய்ந்த வழிபாடு முறைகளை, கோவிலுக்கு பாத்திய பட்டவர்கள், தங்களின் மாமன் மைத்துனர்களான, தெலுங்கபட்டி வம்சா வழி பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்களை முன்வைத்தே தங்கள் கோவில் வழிபாடு. திருவிழா மற்றும் தங்கள் உறவுமுறை சடங்குகளையும், அனைத்து விதமான சுக- துக்கக்காரியங்களையும் தொடர்ந்து நடத்தியும் வந்துள்ளனர்........!

இந்நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த கோவில் வழிபாடுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், நடத்தும் பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டது. இரு நாட்களாக நடத்தப்பட்ட புனித வனத்துச் சின்னப்பர் கோவில் வழிபாடுகளில், முன்னதாக முதல் குளித் தலை, புனித கிறிஸ்தீனா ஆலைய பங்குதந்தை அ. அல்போன்ஸ் அடிகளாரால்
புனிதம் செய்யப்பட்டு சுவாமிஸ்சுருவங்கள் அலங்கரிப்பட்ட ரத வாகனம்,........ !
கோட்டமேடு (குளித்தலை- மணப்பாறை )
சாலை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே, கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலையிலிருந்து, உள்ளுர் மக்கள் - இன உறவு மக்கள், உள்ளிட்டவர்கள் முன்னிலையுடன் வான வேடிக்கையுடன் புனித வனத்துச் சின்னப்பர், அன்னை ஆரோக்கியமேரி, பதுவை அந்தோணியார் சுருவங்கள், வானவேடிக்கையுடன், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.!

சாதி, மதங்களுக்கு அப்பாற்ற வழிபாடு விழாவாக, இவ்விழா தேர்பவனியின்போது அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளை தூய்மைப் படுத்தி, கோலமிட்டு பத்தி பரவசமுடனும் இறைநம்பிக்கையுடன் கண்ணீர்மல்க ஊர்வலத்தின்போது வழிபாடு செய்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்ததாக அப்பகுதியினர் கூறினார்கள்.!

நிறைவாக ஊர்வலம் கோவிலை வந்தடைந்த பின்னர், பழங்கால வழக்க படியும், ஆதிகால தங்கள் குல. இன மக்களின் வழக்கப்படியும் தங்கள் மாமன் - மைத்துனர்கள் வம்சாவழி தெலுங்க பட்டி பெரிய குடும்ப வாரிசுதாருக்கு பரிவட்டம் கட்டி உரிய மரியாதை செலுத்தி அழைத்து வரப்பட்டது. மே லும் சிலரும்அழைத்து வரப்பட்டனர்......!


தொடர்ந்து அதிகாலை கிடாவெட்டும் நிகழ்வை தொடர்ந்து, குளித்தலை பங்குதந்தை அறிவுறுத்தலின்படி,
- கோவில் விழாவுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களால், அன்று காலை முதல் நன்பகல் வரை சிறப்பு ஜெப வழிபாடு முன்னெடுக்கப்பட்டு பிரத்தனையும் நடைபெற்றது.
. இதனை தொடர்ந்து . பங்குதந்தை அ.அல்போன்ஸ் அடிகளார்
கோவிலை புனிதம் செய்து சிறப்பு ஜெபவழிபாடு பிராத்தனைகளை நடத்தி கோவிலையும், வழிபாட்டில் கலந்துகொண்ட மக்களையும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிருந்து உணவுகளையும் மந்திரித்து புனிதபடுத்தினார்........!
இதனையடுத்து அனைவருக்கும் திருஉணவு விருந்து வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.!

விழா இறுதியில் தங்கள் கோவில் வழிபாட்டு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். நகர்புறவீட்டுவசதி, மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும்
குளித்தலை சட்டமன்ற உறுப்பினர், மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி ஆகியோர் ஆலோசனைகளின்படியும்பெரிதும் உதவிய கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சுந்தரவதனம்,
குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், வைகைநல்லூர் ஊராட்சித்தலைவி சுமதி கோபால், மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், வருவாய், காவல், ஊரக வளர்ச்சித்துத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நன்றியும் - பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. உட்பட முக்கிய முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டது.!

வழிபாட்டு விழாவில், கரூர், திருச்சி, தஞ்சாவூர். நாமக்கல், சேலம்,ஈரோடு, கோயம்புத்தூர்,சேலம், சென்னை, கன்னியாகுமாரி, புதுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல நூற்றுக்கணக்காண குடும்பத்தினர், தங்கள்குடும்பத்தாருடன் கலந்துகொண்டார்கள்.
திருச்சி குமார்....




Comments