மாஜிசெல்லூர் ராஜூ மீது வசைபாடலா! அரசியல் கோமாளி, நவீன விஞ்ஞானி! பா.ஜ.க.வினரின் பரபரப்பு போஸ்டர்கள்!!
- உறியடி செய்திகள்

- Jun 18, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா...
மாஜிசெல்லூர் ராஜூ மீது வசைபாடலா! அரசியல் கோமாளி, நவீன விஞ்ஞானி! பா.ஜ.க.வினரின் பரபரப்பு போஸ்டர்கள்! அதிமுக வட்டாரம் அதிர்ச்சியா!
அதில் செல்லூர் ராஜுவை அரசியல் கோமாளியே தெர்மாகோல் விஞ்ஞானியே என விமர்சித்து பாஜகவின் வன்மையான கண்டனங்கள் என அச்சடிக்கப்பட்டுள்ளது.!
கடந்த வாரம் ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து அதிமுகவினர் (3. அணியினரும்) கடும் கொந்தளிப்புக்குள்ளாகி அண்ணாமலையின் மீது வசைபாடல் விமர்சனங்களை கொட்டித்தீர்த்தனர்!
இதில் மாஜிக்கள், ஜெயக்குமார், சண்முகம் உள்ளிட்டோரின் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை மீதானவிமாசர்ணம் மிகவும் கடுமையாகவே இருந்ததாக கூறப்படுகின்றது!
மேலும் இந்த கருத்திற்கு அதிமுகவினர் பலரும்கடும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்!
தமிழக பாஜக கட்டுப்பாடு இல்லாத இயக்கம், மாநில தலைமை பொறுத்தவரை ஒரு பொம்மை மட்டுமே அந்த பொம்மையை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்து வைக்கலாம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்பவர் நிரந்திர தலைவர் இல்லை, பொம்மை போன்று தான், ராஜாவாகவும் வைக்கலாம் பொம்மையாகவும் வைக்கலாம். ஆண்டவனே தடுத்தாலும் ஜெயலலிதாவை பழித்தவர்களை நாங்கள் விட மாட்டோம் என செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்திருந்தாக பரப்பரப்பு தகவல்கள் வெளியாகின!
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த மாஜிசெல்லூர் ராஜுவை கண்டித்து மதுரை கிழக்கு மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு சார்பாக மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.!
அதில் செல்லூர் ராஜுவை அரசியல் கோமாளியே தெர்மாகோல் விஞ்ஞானியே என விமர்சித்து பாஜகவின் வன்மையான கண்டனங்கள் என அச்சடிக்கப்பட்டுள்ளது.
பாஜகவினர் ஒட்டிய இந்த போஸ்டரால் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Comments