உதயநிதி ஸ்டாலின் தலைமையில்! தி.மு.க.இளைஞரணி நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலிடம் நேரில் வாழ்த்து !!
- உறியடி செய்திகள்

- Nov 24, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா....
திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் - நீர்வாகிகளுடன் நேரில் சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப்பெற்றார்கள்.
தி.மு.கழக பொதுச்செயலாளர், தமிழக நீர்வழி, கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது......

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம். துணை செயலாளர்களாக ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம். திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெல்ன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்....
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது......

இதனையடுத்து, தி.மு.கழக இளைஞரணி செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில துணைச்செயலாளர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர், தூத்துக்குடி ஜோயல் உள்ளிட்ட நிர்வாகிகள், தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர் ....
தொடர்ந்து தமிழகம், மட்டுமின்றி அனைத்துத்தரப்பினரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.....




Comments