தளபதி மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பாய் கழக விதிகளைபின்பற்றி இணைவோம்!அமைச்சர்கே.என்.நேரு வலியுறுத்தல்!!
- உறியடி செய்திகள்

- Apr 19, 2023
- 2 min read


ஆசிரியர். மணவை எம்.எஸ்.ராஜா.
கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர். தளபதியரால்ல தொடங்கப்பட்டு, பொதுச்செயலாளர் . அமைச்சர், துரை- முருகன், கழக பொருளாளர், நாடாளுமன்ற தி.மு.கழகக்குழு உறுப்பினர்களின் தலைவர், டி.ஆர்.பாலூ உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளின்அறிவுறுத்தல் ஆலோசனைகளின் படிஉடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முன்னெடுப்புடன் கலைஞர் நூற்றாண்டுகழக பவளவிழா ஆண்டையொட்டிஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்த்தல்
கழகப் முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை!
கழகத் தலைவர் தளபதியார்மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு, பொதுச்செயலாளர் துரை- முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளின்படி உடன்பிறப்புகளாய் இணைவோம் என்றமாபெரும் முன்னெடுப்புடன் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவள விழா ஆண்டு ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்த்தல் குறித்து கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கழகத்திற்கு வேண்டுகோல் விடுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பின் வருமாறு.

இந்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்த்தலும் புதுப்பித்தலுமான பணிகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து வார்டு கிளைகள் ஊராட்சி பேரூர் ஒன்றிய நகர பகுதி நகரிய மாவட்ட மாநகர் மாவட்ட மாநில அமைப்புகள் தலைமைகழகம் ஆகியவற்றுக்கு என
ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அமைப்புகளை செயற்படுத்தும் இயக்கம்.
கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்தளபதி மு க ஸ்டாலின் தலைமையேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாடறியும்....
ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 140 வார்டு கழகங்களையும் 1 கோடியே 10 இலட்சத்திற்கு மேல் உறுப்பினர்களையும் கொண்ட தி மு கழகம் தொடக்க காலம் முதல் பாதுகாத்துவரும் ஜனநாயகம் மரபின் தொடர்ச்சியாக
15 வது தேர்தலுக்கு தயாராகும் நிலையில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் புதுப்பித்தல் பணிகள் 2017 செப்டம்பரில் தொடங்கி 2022 டிசம்பரில் தலைமைக்கழகத் தேர்தல் முடிவுற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர்கலைஞரால் அரை நூற்றாண்டு காலம் கட்டி காத்த நம் கழகத்தை வலிமைபடுத்திட மேலும் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மாபெரும் முன்னெடுப்புடன் கழகத் தலைவர் முதல்அமைச்சர்,தளபதி மு க ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.......

இதனை தொடர்ந்து, ஆங்காங்கு கழக உறுப்பினர்கள் சேர்ப்பு பகுதிகளின் பார்வையாளர்கள், பொருப்பாளர்கள் மூலம் வரப்படும் தகவல்களை தொடர்ந்து, தலைவர் தளபதியார். பொதுச்செயலாளர் துரை- முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியில் கீழ்கண்ட கழக விதிமுறைகளை பின்பற்றிட கழகத்தினரை கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
BLA2 பொறுப்பில் கிளைக் கழக / வார்டு செயலாளர் இருக்கக் கூடாது.
பூத் கமிட்டியில் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் இருக்க வேண்டும். உதாரணமாக
1000 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 10 பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்தப் பட்டியலில் BLA2 சேர்க்க கூடாது.
BLA2 பட்டியலை தனிப்பட்டியலாக வழங்க வேண்டும்.
பூத் கமிட்டியில் கழக செயலாளர்கள் தவிர்த்து (அவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள வேண்டும்) என்பதால் பிற நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் செயல்படலாம்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்தந்த பூத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டியில் செயல்பட முடியும்.
. பூத் கமிட்டியில் தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்தவர் அல்லது தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர் இருக்க வேண்டும். வாட்ஸப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட ஏதுவாக இருக்கும்.*
பூத் கமிட்டியானது இளைஞர், மகளிர் என கலந்து இருப்பின் சிறப்பு.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் செயலாற்றுபவராக இருத்தல் வேண்டும். மேலும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நமது அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக இருத்தல் வேண்டும்.

BLA2 பொறுப்பில் கிளைக் கழக / வார்டு செயலாளர் இருக்கக் கூடாது.
பூத் கமிட்டியில் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் இருக்க வேண்டும். உதாரணமாக
1000 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 10 பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்தப் பட்டியலில் BLA2 சேர்க்க கூடாது.
'. BLA2 பட்டியலை தனிப்பட்டியலாக வழங்க வேண்டும்.
பூத் கமிட்டியில் கழக செயலாளர்கள் தவிர்த்து (அவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள வேண்டும்) என்பதால் பிற நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் செயல்படலாம்.
. பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்தந்த பூத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டியில் செயல்பட முடியும்.
பூத் கமிட்டியில் தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்தவர் அல்லது தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர் இருக்க வேண்டும். வாட்ஸப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட ஏதுவாக இருக்கும்.
. பூத் கமிட்டியானது இளைஞர், மகளிர் என கலந்து இருப்பின் சிறப்பு.





Comments