top of page
Search

மு.க.ஸ்டாலின் பேச்சு! 40.க்கு 40 லிலும் திமுக கூட்டணி வெல்லும்! இதை 2024 தேர்தல் முடிவு சொல்லும்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 29, 2023
  • 4 min read
ree


மு.க.ஸ்டாலின் பேச்சு! 40.க்கு 40 லிலும் திமுக கூட்டணி வெல்லும்! இதை 2024 தேர்தல் முடிவு சொல்லும்!


திருச்சியில் டெல்டா மாவட்ட திமுக வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ree

கூட்டத்தில், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது!


“பாஜக ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை, சமூகநீதியை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமானால், இந்தியாவில், ஜனநாயகமே இருக்காது. ஏன், தமிழ்நாடு என்ற மாநிலமோ, அதற்கான சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ இருக்க மாட்டார்கள். அத்தனையையும் காலி செய்து விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இதுதான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.!

ree

ree

புதிய நாடாளுமன்றம் கட்டியிருக்கிறார்களே எதற்கு? 888 இருக்கைகளைப் போட்டிருக்கிறார்கள். அது எதற்காக? நாடாளுமன்றத்தில் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கைகளைப் போட நினைக்கிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்ற பேரால் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். வடமாநிலங்களில் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.!

ree

பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவர்கள் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப நம் அரசின் திட்டங்களைப் பற்றிப் பேசுவோம்.

நம் அரசு கொண்டு வந்திருக்கும் நலத்திட்டங்கள் குறித்து வாக்காளர்களிடம் விளக்குங்கள். இதன் மூலமாக எதிரிகள் பரப்பும் அவதூறுகள் சுக்குநூறாக நொறுங்கிப் போகும்.

இன்றைக்கு பிரச்சார பாணி மாறிவிட்டது. இன்றைக்கு சமூக ஊடகங்கள் தான் சிறப்பான பிரச்சாரக் களங்களாக மாறிவிட்டன. வீட்டில் உள்ளவர்களே பக்கத்து அறையில் இருப்பவர்களிடம் வாட்ஸப் மூலம் பேசிக் கொள்ளும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.!

ree

அதே நேரத்தில், நாம் அனுப்பும் செய்தி ஒரு நிமிடத்தில் உலகம் முழுக்க பரவும் வசதியும் அதில் இருக்கிறது. இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களில் கணக்குத் தொடங்குவதையும் கட்டாயம் செய்ய வேண்டும். அந்தக் கணக்குகளில் இருந்து அவதூறுகளுக்கு பதில் சொல்லுங்கள். நம் கொள்கைளைப் பேசுங்கள். நலத்திட்டங்களை பதிவிடுங்கள். தேவையில்லாத வம்பு வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்..!


எதையாவது சொல்லி நம்மை திசை திருப்பி விடுவார்கள். இந்த திசைமு.க.ஸ்டாலின் திருப்பலுக்கு பலியாகி விடக் கூடாது. அதேபோல், தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கவும் கூடாது. சமூக ஊடகங்களை நல்ல நோக்கத்தோடு - நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.!

ree

நம்முடைய தொண்டர் பலத்திற்கும் கட்டமைப்புக்கும் நிகராக தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இல்லை என்பதுதான் உண்மை. நம் பலத்தை நாம் சமூக ஊடகங்களிலும், களத்திலும் முழுமையாகக் காட்ட வேண்டும். ஏனென்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிகமிக முக்கியமான தேர்தல். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளையும் நமது அணி கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல -இந்தியா முழுமைக்கும் நமது அணி வெற்றி பெற வேண்டும்.!


இந்தியாவின் கட்டமைப்பை பாஜக ஆட்சி சிதைத்துவிட்டது. இதற்கு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. பாஜக ஆட்சி தொடருமானால் இந்தியாவில் ஜனநாயகத்தை, சமூகநீதியை, மக்களாட்சியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.!

ree

மீண்டும் பாஜக ஆட்சி அமைக்குமானால் - இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. தமிழ்நாடு என்ற மாநிலமோ - அதற்கான சட்டமன்றமோ - முதலமைச்சரோ - அமைச்சர்களோ - சட்டமன்ற உறுப்பினர்களோ இருக்க மாட்டார்கள். அத்தனையையும் காலி செய்து விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இது தான் அனைத்து மாநிலங்களுக்கும் நடக்கும்.!


வடமாநிலங்களில் இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் போனாலும் - வட மாநில எம்.பி.களை வைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தமிழ்நாட்டின் குரலை இதன் மூலமாக தடுக்கப் பார்க்கிறார்கள். எனவே தான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமான தேர்தலாகச் சொல்கிறேன். மாநிலங்களுக்கு - பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்க்கு - பல்வேறு மொழியைப் பேசுபவர்களுக்கு - பல்வேறு கலாச்சார பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட கட்சி பாஜக. ஒற்றைக் கட்சியே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது. ஒற்றைக் கட்சி ஆட்சி அமைந்தால் - ஒரே ஒரு ஆள் கையில் அதிகாரம் போய்விடும்.!

ree

இது பாஜகவினருக்கே ஆபத்தான கொள்கை ஆகும்.அதனால் தான் பாஜக இந்த தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்கிறோம். இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். எனவேதான் 26 கட்சிகள் அடங்கிய இந்தக் கூட்டணிக்கு indian national developmental inclusive alliance என்று பெயர் சூட்டி இருக்கிறோம். INDIA - என்பது இந்தக் கூட்டணிக்கு பெயர். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணி தான். இதனை பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.!


பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்துதான் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார்.

நாம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுப் போனாலும், வட மாநில எம்பிக்களை வைத்து ஆட்சியைப் பிடித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தமிழகத்தின் குரலை இதன் மூலமாகத் தடுக்கப் பார்க்கிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தலை மிக மிக முக்கியமான தேர்தலாக நான் சொல்கிறேன்.மாநிலங்களுக்கு, பல்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கு, பல்வேறு பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட ஒரு கட்சிதான், பாஜக. ஒற்றைக் கட்சியே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி அது.

ஒற்றைக் கட்சி ஆட்சி அமைந்தால், ஒரே ஒரு ஆள் கையில் அதிகாரம் போய்விடும். இன்னும் சொல்கிறேன், அவ்வாறு அமைந்தால் அது பாஜகவினருக்கே ஆபத்தான கொள்கை!.

ree

அதனால்தான் பாஜக இந்தத் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்று சொல்கிறோம்.இந்த முக்கியமான இலக்கை முன்னெடுக்கும் கட்சிகள் அனைவரும் இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம். 26 கட்சிகள் அடங்கிய இந்தக் கூட்டணிக்கு – Indian National Developmental Inclusive Alliance – என்று பெயர் சூட்டி இருக்கிறோம். INDIA – என்பது இந்தக் கூட்டணிக்குப் பெயர். எனவே இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த INDIA கூட்டணிதான். இதனை பிரதமராக இருக்கும் மோடி அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.!

ree

பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான அணியை அமைத்துவிட்டார்களே என்று நினைத்து இப்போது ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நோக்கத்தைப் பற்றி இப்போது அல்ல, நான் ஓராண்டு காலமாக சொல்லிக்கொண்டு கொண்டிருக்கிறேன். அதனால் என் மீதும் அவர்களுக்குக் கோபம். அதனால்தான் மத்தியப் பிரதேசத்துக்குப் போனாலும் திமுகவைத் திட்டுகிறார். அந்தமான் விமான நிலையத்தைத் திறந்து வைக்கப் போனாலும் திமுகவைத் திட்டுகிறார்.என்ன சொல்கிறார், வாரிசுகளுக்கான கட்சியாம். இதைக் கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு. வேறு ஏதாவது யோசித்து கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.!

ree

நான் இன்னும் சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆமாம், வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞரின் வாரிசுகள் நாங்கள், இதனைத் தைரியமாக, பெருமையோடு என்னால் சொல்ல முடியும்.

பாஜக யாருடைய வாரிசு? நான் கேட்கிறேன். கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா? குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடு மறக்கவில்லை. அன்று குஜராத்தில் நடந்ததை இன்று மணிப்பூர் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறது.!


மே மாதம் தொடங்கிய வன்முறையை இன்றுவரை அந்த மாநிலத்தை ஆளும் மணிப்பூர் பாஜக அரசாலும் தடுக்க முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசாலும் தடுக்க முடியவில்லை. வன்முறையாளர்களும், மாநிலத்தை ஆளும் மணிப்பூர் போலீஸாரும் கைகோத்துக் கொண்டு மக்களைத் தாக்குகிறார்கள் என்று நான் சொல்லவில்லை, பாஜகவை சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பாவோலியன்லால் ஹொக்கிப் சொல்லி இருக்கிறார். மீண்டும் சொல்கிறேன்… இப்படிச் சொல்லி இருப்பது ஸ்டாலின் அல்ல, பாஜகவுக்கு எதிரணியில் இருப்பவர்கள் அல்ல. பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார்.!

ree

ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து, மனக்கசப்பை உருவாக்கி, வெறுப்பு அரசியல் மூலமாக அரசியல் ஆதாயம் தேட நினைத்ததன் விளைவுதான் இன்று மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இங்கே ஒரு கொத்தடிமைக் கூட்டம், யார் என்று தெரியும், அதிமுக என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் யாராவது மணிப்பூரைப் பற்றிப் பேசினார்களா? வாய்க்கு வந்ததைப் பேசுவாரே பழனிசாமி. அவர் பேசினாரா? பேசவில்லையே. ‘பாஜகவுக்கு நான் அடிமையில்லை’ என்று சொல்லும் பழனிசாமி, மணிப்பூர் கொடூரத்துக்குக் காரணமான அந்த மாநில முதல்வரையோ ஒன்றிய பாஜக அமைச்சரையோ கண்டித்தாரா?


பழனிசாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். நான் அப்போதே கேட்டேன், “பக்கத்தில் யாரை வைத்துக் கொண்டு நீங்கள் பேசுகிறீர்கள்?” என்று கேட்டேன். சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு, அதற்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றம் போனவர் பழனிசாமி. அவருடன் அமைச்சராக இருந்தவர்கள் மீதும் ஊழல் கறை படிந்திருக்கிறது. இந்த ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பிரதமர் பேசுகிறார். பேசலாமா?

ree

நான் இன்னும் கேட்கிறேன். கர்நாடக மாநிலத்தில் ஊழல் பாஜக அரசை, ஊழலுக்காகத்தானே அந்த மாநில மக்கள் விரட்டி அடித்தார்கள், தோற்கடித்தார்கள். அது மறந்து போய்விட்டதா?அதிமுகவினர் மீதான ஊழல் வழக்குகளைக் காட்டி அவர்களை அடிபணிய வைத்துள்ளது பாஜக கடந்த காலத்தில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பாஜகவுக்கு பயந்து அடமானம் வைத்தது அதிமுக.

எனவே உரிமைகளைக் கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் இன்றைக்குக் கைகோத்து வருகிறார்கள். இவர்களை இந்தத் தேர்தலில் முழுமையாக நாம் வீழ்த்தியாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் மணிப்பூர் ஆகி விடாமல் தடுத்தாக வேண்டும்.!


தமிழை, தமிழினத்தை, தமிழக மக்களைக் காக்க வேண்டுமானால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பைக் காப்பாற்றியாக வேண்டும்” 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெல்லும். இதை 2024. நாடாளுமன்ற தேர்தல் முடிவு சொல்லும் இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page