top of page
Search

மானமதுரைஎம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ.சேவை மையம்! பயன்பெற,எம்.எல்.ஏ. தமிழரசி அழைப்பு!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 7, 2023
  • 1 min read
ree

மணவை, எம்.எஸ்.ராஜா....


சிவகங்கை, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இவை சேவை மையம். தமிழரசி ரவிக்குமார் துவக்கிவைத்தார்....


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நேற்று திறந்து வைத்தார்.


இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர், முன்னால் அமைச்சர் தமிழிரசி கூறுகையில்!


இந்த இ-சேவை மையத்தில் சாதி சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடியிருப்புப் சான்றிதழ்,முதல் பட்டதாரி சான்றிதழ்,பின் தங்கிய வகுப்பு சான்றிதழ், வாரிச் சான்றிதழ், திருமணமகாதவர் சான்றிதழ், முதியோர் ஆதரவற்ற விதவை சான்றிதழ், மாற்றுத்திறனாளி உதவித்தொகை சான்றிதழ்,ஆண் குழந்தை இல்லை சான்றிதழ், இரண்டு பெண் குழந்தை சான்றிதழ், ரேசன் கார்டு ,பட்டா பிற சான்றிதழ் போன்றவைகளை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறாக அவர் கூறினார்.


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், இளையான்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன்,திமுக தலைமை கழக பேச்சாளர் நெட்டூர் அய்யாச்சாமி,நகர பொருளாளர் மயில்வாகனன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வழக்கறிஞர் கதிரவன்,மானாமதுரை வார்டு திமுக உறுப்பினர்கள் செல்லப்பாண்டியன், ரா.செல்வக்குமார், இந்துமதி திருமுருகன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா,தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் பால்பாண்டி மற்றும் ஒன்றிய ,நகர திமுகவினர் கலந்து கொண்டனர்

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page