மணப்பாறையில் தண்ணீர்பந்தல் திறப்பு!ஆணையிட்டது தலைமை! அறிவுறுத்தினார் அமைச்சர்!!
- உறியடி செய்திகள்

- Apr 6, 2023
- 1 min read

தி.மு.கழக தலைமைக்கழம் அண்மையில் தமிழகம் முழுவதும் கோடை வெயிலை யெட்டி, ஆங்காங்குதண்ணீர் பந்தல் தொடங்கி பொதுமக்களுக்கு பயன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்றும். இதில் தன்னார்வு நல அமைப்பினர்களுடன் தி.மு.கழக அனைத்துத் தரப்பு மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் இதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை ஊக்கப்படுத்தும், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கட்சியின் நிர்வாகிகள், அனைத்துத்தரப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய ஆலோசனைகள். அறிவுறுத்தல்களையும் வழங்கிவந்தார்.
மணப்பாறையில்.ஜேசிஐ மற்றும் காவேரி கேட்டரிங் & பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து கோடைகால தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த தண்ணீர் பந்தல்,மதுரை ரோடு லெட்சுமி நாராயணன்மருத்துவமனை அருகே காவேரி கேட்டரிங் கல்லூரி செல்லும் வழியில். ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனை,முன்னால் நகர தி.மு. கழகச் செயலாளர்,நகரட்சித்தலைவர் கீதா, ஆ.மைக்கேல் தெடங்கிவைத்தார்.
நிகழ்வினில்,நகர்மன்ற உறுப்பினர்கள் கெளவ்ரி ராஜரத்தினம் , அபிலாஷ், முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணப்பாறை ஜேசிஐ தலைவர் பொன்.பாஸ்கரன்தலைமையில் நிகழ்வின் திட்ட இயக்குனர் முன்னால் தலைவர் ஶ்ரீதரன்,துணை திட்ட இயக்குனர் .செந்தில்குமார்,, ஜே.காம் Chairman, விஜயராஜ், மண்டல இயக்குனர் முல்லை.சந்திரசேகர், .செந்தில், கமல், முருகன்,.முருகேசன், .செல்வபாஸ்டீன், கிருபாகரன், மணிகண்டன், .செல்வராஜ், .நல்லதம்பி, . டேனியல், பழனிக்குமார், மற்றும் ஜேசிஐ குழு உறுப்பினர்கள், முன்னால் தலைவர்கள், உறுப்பினர்கள், காவேரி கல்லூரி முதல்வர் திரு.வைத்தீஸ்வரன், மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் செய்திருந்தார்கள்.
நிகழ்வில் பொது மக்களுக்கு
நீர் மோர், தர்பூசணி, தண்ணீர்ஆகியவை
வழங்கப்பட்டது.
சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.
இந்த தண்ணீர் பந்தல் கோடைகாலம் முழுவதும் (60 நாட்கள்)தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




Comments