top of page
Search

மண்டிட்டு ஆட்சி, பின் மின்சாரத்துறையில் மெகா ஊழலா? அதிமுக ஆட்சி அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்கள்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 30, 2023
  • 2 min read
ree


முதலில் சீன்; மண்டியிடுதல் பிறகு... அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் ஊழல் - அமலாக்கத்துறை வெளியிட்ட புதிய தகவல்கள்!


சமூக வளைதளை வைரல் பதிவு!!

ree

ஜெயலலிதா மறைந்து 6 ஆண்டுகளாகியும் அவர் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் அவரின் சாதனை வாழ்வை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றது...

அவரின் வாரிசுகளும் சளைத்தவர்கள் அல்ல என சொல்லும் அளவுக்கு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டு சிறை வாசலை நோக்கி காத்திருக்கின்றனர்... இதையல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைத்துகொண்டு, திமுக மீது ஆதாரமின்றி பொய்யான ஊழல் புகார்களை சொல்லி, அதை ஊடகங்கள் மூலம் பரவ விடுவதை வெட்கமின்றி செய்கிறார்கள்...

ree

எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை பார்த்துவிட்டு திரும்பிய சில மணிகளிலேயே, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்கு தொடர்பான புதிய தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது...

அதாவது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2011 – 2016 வரை மின்சாரத்துறைக்கு நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் நடந்த ஊழல் தொடர்பாக ரூ.360 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது...

ree

ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக சென்னை துறைமுகத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் எடுத்திருந்தது...


துறைமுகத்தில் செலுத்தப்பட்ட வரிப்பணத்தைவிட பல மடங்கு பணத்தை போலி பில் மூலம் பெற்று மோசடி நடந்தது... சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாகத்தினரும் கூட்டு சதி செய்து ஊழல் செய்ததாக 2018 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் புகார் அளித்தது... எடப்பாடி பழனிசாமி ஆட்சி என்பதால் தொய்வாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேகம் எடுத்தது...

ree

908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது விசாரணையில் உறுதியானதால் முன்னாள் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் என மொத்தம் 10 பேர் மீது 27.2.2023 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்தது...

இந்த வழக்கில் சிக்கிய மின்வாரிய அலுவலர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் 24.4.2023 அன்று அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்... அப்போது முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது... இந்நிலையில், அன்றைய சோதனையில் சிக்கிய நிரந்தர வைப்புத் தொகை ரூ.360 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது...

ree

பாஜகவுடன் மோதல் போல நாடகமாடி பெரிய ஆளுமை போல 'சீன்' போட்ட எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் மண்டியிட்ட பிறகு 'பெட்டிப் பாம்பாக' மாறியதை பார்த்தால், நாடாளுமன்ற 'சீட்' பேரம் முடியும் வரை அதிமுக ஆட்சியின் ஊழல்கள் தொடர்பாக எடப்பாடியின் குடுமி பாஜகவின் கையில் இருக்குமோ.....

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page