மணிப்பூர் கலவரம்! இந்தியாவுக்கே தலை குனிவு! தி.மு.க.வழக்கறிஞர் கணேஷ்பாண்டியன் வேதன! கடும்கண்டனம்!!
- உறியடி செய்திகள்

- Jul 22, 2023
- 2 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா.
தென்சென்னை மாவட்ட,தி.மு.கழக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் கணேஷ்பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது!
மணிப்பூர் மாநிலத்தில் 85% மலைகளும் காடுகளும்.15% சமவெளிப்பகுதிகளும் கொண்ட
மலைப்பகுதிகளின் அடியாழத்தில்மதிப்பற்ற கனிம வளங்கள் புதைந்துள்ளது!
.இந்த மலைப் பகுதிகளில்தான் குக்கி இன பழங்குடி மக்கள் ஆயிரக்கணக்காண ஆண்டுகளாகவாழ்ந்து வருகின்றனர்.
இந்திய அரசின் Geological Survey (SGI) கண்டு பிடித்த தரவுகளின்படி மணிப்பூர் மலைகளுக்கடியில் விலைமதிப்பு மிக்க நிக்கல் ,தாமிரம்,பிளாட்டினம் போன்ற கனிமப் படிவங்கள் ஏராளமாக உள்ளன. என்கிற தகவல்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது!

இந்த கனிம வளங்களைக் கொள்ளையடிக்க அதானி உட்பட கழுகுகள் போல் காத்திருக்கின்ற. கார்ப்பரேட்டுக்கள் குறிப்பாகதற்பொழுதுள்ள நடைமுறைச் சட்டப்படி மலையில் பழங்குடிகளைத் தவிர யாரும் நிலம் வாங்க முடியாது. என்றும் கூறப்படுகின்றது!
மெய்தி மக்கள் சமவெளியில் வாழ்கின்றனர்.இவர்கள் ST க்கள் இல்லை. !குக்கி நாகா மற்றும் சில இன மக்கள் மலைகளில் வாழும் ST பிரிவினர் என்கிற தகவல்கள் உள்ளது!

.மெய்தி மக்கள் மலைகளில் நிலம் வாங்க முடியாது. இங்குதான் பாஜகவின் அரசியல் கோர முகம் உள்ளே நுழைந்திருக்கும் குற்றச்சாட்டுகளும் வலுப்பெற்றுள்ள நிலையில்!
மேய்தி மக்களை பழங்குடிகளாக அறிவிக்க மாநில பாஜக அரசு மணிப்பூர் உயர்நீதி மன்றத்தில் தீர்ப்புவாங்குகிறது.!


இந்த செய்தி பரவியதும் ஒரு ஊர்வலம் நடக்கையில் கலவரம் தூண்டி விடப்பட்டு.பிறகு இன்றுவரை நெருப்பு அணையவில்லை. என்பது வேதனையும், வேதனையாகும்!
மனித உயிர்கள்.உடைமைகள் கட்டிடங்கள் சர்ச்கள் கோயில்கள் வீடுகள் வணிக வளாகங்கள்என எல்லாம் எரிந்து சாம்பலாகின்றன.பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள்,பாலியல் வன்முறை நிர்வாண ஊர்வலம் எல்லாம் தொடர்கதையாகிப் போனது மனிதநே.யத்திற்கும், மனிதர்களுக்கு விடப்பட்டுள்ள சவாலாக
வேண்டி யுள்ளது!

முதல்வர் பைரன்சிங்.மெய்தி இனத்தைச் சார்ந்தவர்.பாஜக கட்சி அரசு.மெய்தி மக்கள் மலைகளில் நிலம் வாங்கும் உரிமை பெற்றால் அதைக் கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளை லாபத்தில் விற்கலாம் என்று தூண்டில் போட்டதான தகவல் கண்டத்திற்குரிய ஒன்றாகும்!
பாசிசக் குழுக்கள்.அதை நோக்கி அரசை நகர்த்தியதை கண்டும் காணமல் இது நாள்வரையிருந்த, ஒன்றிய - மாநில பாஜக. அதன் அரசுகள் இருந்தது, இந்திய இறையாமைக்கு, மக்கள் பாதுகாப்பு, வாழ்வுரிமைே போன்றவற்றை பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது!

பல்லாயிரம் ஆண்டுகள் தங்கள் வாழிடமாக,தாய் மண்ணாக இருந்த நிலங்கள் பறிக்கப்படும் சூழலுக்கு வந்ததும் இயல்பாக பயமும் பதட்டமும் ஏற்பட்டு குக்கி நாகா மக்கள் போராடுகின்றனர்.!
சொந்த மாநில மக்களை இரு கூராகப் பிரித்து மோத விட்டு நிலத்தை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்க வழியமைத்துக் கொடுக்கிறது பாசிச பாஜக மற்றும் இதன் அரசுகள்!
. கனிம வளங்களைக் கொள்ளையடிக்க இன அழிபாபை நடத்துகிறது.
ஆகவே மணிப்பூர் பற்றி ஏனோதானோ என்றுமோடி பேசுயுள்ளது, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தும் வருகிறது!

மணிப்பூர் உண்மைநிலை பற்றி நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் மோடிமணிப்பூருக்கு போக மாட்டார். கலவரத்தை அடக்க மாட்டார். என்கிற எல்லைமீறிவிட்டதாக கூறப்படும் இந்நிலையில் மோடியும் - மாநில பா.ஜ.க. அரசும் பொருப்பேற்க வேண்டும்!
மணிப்பூர் கலவரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மாநில - ஒன்றிய, பா.ஜ.க. அரசால் !எதிர்கால சந்ததி மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெரும் தலைகுனிவைவே ஏற்படுத்தியுள்ளது! என்பதில்
எள்ளலவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
ஒன்றியதேச மக்கள் அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்திய மணிப்பூர் கலவர சம்பத்தையும், அதனை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில- ஒன்றிய அரசுகள் செயல்பாடுகள் மிகுந்த கண்டனத்திற்குரியது!
இவ்வாறு தி.மு.கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேஷ்பாண்டியன் கூறியுள்ளார்!




Comments