top of page
Search

மணிப்பூர் கலவரம்! மாநில - ஒன்றிய பா.ஜ. அரசே பொருப்பு! அமைச்சர் உதயநிதி குற்றசாட்டு! கடும் கண்டனம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 22, 2023
  • 1 min read

Updated: Jul 22, 2023

ree

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா


பாஜக ஆளும் மணிப்பூரில் கலவரம் தொடரும் நிலையில் அங்கிருந்து பரவிய அதிர்ச்சி வீடியோ, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனை!


மணிப்பூர் கலவரம்! மெளனம் கலைத்த மோடி! பா.ஜ.க. மாநில - ஒன்றிய மோடி அரசே பொருப்பு, கடும் குற்றச்சாட்டு, கண்டனம்!


பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்லும் வீடியோவை நான் பார்க்கவில்லை, அதை பார்க்ககூடிய மன தைரியம் எனக்கு இல்லை;

3 மாதங்களுக்கு பின்னர்தான் மணிப்பூர் கலவரம் பற்றி வாய் திறக்க பிரதமருக்கு மனம் வந்துள்ளது! "


சிறுபாண்மை கிறிஸ்தவ குகி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களை,

பெரும்பாண்மை இந்து மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள்

நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக வீடியோ வைரல் ஆகி வருகிறது...!


மணிப்பூரில் சமூகநீதியற்ற இட ஒதுக்கீட்டை மாநில பாஜக அரசு அமல்படுத்தியதே இந்துக்கள்- கிறிஸ்தவர்கள் இடையே மோதல் ஏற்படக் காரணம் என்கிற கடும்குற்றசாட்டு கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆளும் பாஜாக அரசு மீது வைக்கப்பட்டு வருகிறது!


பல மாதங்களாக கலவரம் -தீவைப்பு- பலாத்காரம் தொடர்ந்தாலும் மாநில பாஜக அரசும் மத்திய மோடி அரசும் மௌனமாக வேடிக்கை பார்க்கின்றன...

மக்கள் மனங்களில் பகைமையையும் வெறுப்பையும் உண்டாக்கிய 9 ஆண்டுகால இரக்கமில்லாத குணம் கொண்ட மோடியின் பாஜக ஆட்சிக்கு இந்த காட்சியும் சாட்சி என்கிற குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வருகிறது!


நாம் நம் இந்திய நாட்டில் தான் வாழ்கிறோமா இல்லை கற்காலத்தில்

காட்டில் வாழ்கிறோமா... ! இதுபோன்று எங்கும் நடக்காத அருவருப்பான சம்பவத்தால் உலகநாடுகள் அதிர்ச்சி அடைந்து கண்டனம் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடதக்க வகையில் சமூக வலைதளங்களில் வைராலகியும் வருகின்றது!


இந்நிலையில், தி.மு.கழக இளைஞர் நலன் விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்....

மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அம்மாநில முதலமைச்சருமே முழு பொறுப்பேற்க வேண்டும்;

பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் செல்லும் வீடியோவை நான் பார்க்கவில்லை, அதை பார்க்ககூடிய மன தைரியம் எனக்கு இல்லை;


3 மாதங்களுக்கு பின்னர்தான் மணிப்பூர் கலவரம் பற்றி வாய் திறக்க பிரதமருக்கு மனம் வந்துள்ளது! "


- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page