ஆர்.எஸ்.எஸ்.கொள்கை அறிக்கையே மனுஸ்மிருதி! முனைவர் தொல்.திருமாவளன் உரையின் ஒரு பகுதி!!
- உறியடி செய்திகள்

- Nov 6, 2022
- 2 min read

ஆர். எஸ். எஸ்ஸின் கொள்கை அறிக்கையே.. மனுஸ்மிருதி!
நாடாளுமன்ற உறுப்பினர்,முனைவர். தொல். திருமாவளவன் அவர்களின் உரையின் தொடர்ச்சி ஒரு பகுதி........
இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே...!
பெண்கள் மற்றும் சூத்திர்கள் பற்றி;
மனுஸ்மிருதியின் இத்தகைய ஆதிக்கம், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றால் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாய்ப் பாதிக்கப்படுவது சூத்திர வர்ணச் சமூகப்பிரிவினரும் அவர்ணச் சமூகப் பிரிவினரும் நான்கு வர்ணங்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகப் பெண்களும் ஆவர்.
மனுஸ்மிருதி, தீண்டப்படாதோர், பழங்குடியினர் ஆகிய அவர்ணப் பிரிவினரைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர்கள் நான்கு வர்ணங்களுக்குள் அடங்கவில்லை. எனவேதான், அவர்கள் அவர்ணஸ்தர் என அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்களை இந்துக்கள் என்னும் வரையறைக்குட்படுத்தி அவர்கள்மீது ஆதிக்கம் செயவதும் ஒடுக்குமுறைகளை ஏவுவதும், அதன்வழி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதும் நான்கு வர்ணங்களுக்கும் கீழானவர்கள் என இழிவுபடுத்துவதும் தொடர்கிறது.
அதேபோல சவர்ணஸ்தர்களில் நான்காவது வர்ணமான சூத்திரர்கள் மற்றும் நான்கு வர்ணங்களையும் சார்ந்த மகளிர் ஆகியோர் ஒடுக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் தொடர்கிறது. அதற்கு மனுஸ்மிருதியின் வர்ணாஸ்ரமக் கோட்பாடும் அதனைத் தொகுத்த மனு என்பவரும் தான் காரணமாகும்.
மனுஸ்மிருதியை எதிர்ப்பது ஏன்?
புரட்சியாளர் அம்பேத்கர் 1917ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தனது முதல் உரையினை நிகழ்த்திய போது எனக்கு இறந்தவரைக் கொல்லும் ஆற்றல் இருக்குமானால் நான் மனுவை தேடிக் கொல்வேன்,என்று ஆவேசமாகக் கொந்தளித்தார். அவர் அப்படிக் கொந்தளிக்கக் காரணம் மனு என்பவர் உருவாக்கிய மனுஸ்மிருதி தான்.....

அந்த மனு என்பவர் சுமதி பார்க்கவா என்னும் வியாபாரம் செய்யும் பிரிவை சார்ந்த ஒரு வைஸ்யர். அவர் மனுஸ்மிருதி மூலம் இந்தியாவில் நிலவும் சாதியப் பிரிவுகளை நிலைப்படுத்தியதுடன் பார்ப்பன - பனியா சாதிக் கூட்டணிக்கான அடிப்படையை வகுத்தளித்தார். அந்தக் கூட்டணி இன்றுவரைத் தொடர்கிறது. அது மட்டுமின்றி அந்தக் கூட்டணிக்குப் பணிசெய்யும் அடிமைச் சமூகப் பிரிவாகவே சூத்திரர்களை அடையாளப்படுத்தினார் மனு.
இந்த சாதிக் கூட்டணிக்குத் தடையாக இருந்த சத்திரியர்கள் துடைத்தெறியப்பட்டார்கள் என்பதை பரசுராமர் கதை கூறுகிறது. அதாவது, சத்திரிய வர்ணத்தை முற்றாக அழித்தொழிக்கும் வகையில் சத்திரிய இனப் படுகொலையைச் செய்தார் பரசுராமர். சத்திரியகுலப் பெண்களின் கருவறைவில் இருந்த குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் கொன்று சத்திரிய வம்சத்தைச சார்ந்த 21 தலைமுறைகளைப் பூண்டோடு அழித்தொழித்தார் என அக்கதை கூறுகிறது.
அதாவது, பார்ப்பனர்களின் நலன்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களின் வம்சத்தையே அழித்தொழிப்பது என்கிற மேலாதிக்கவெறி தான் பார்ப்பனியமாகும்.
அத்தகைய பார்ப்பனீய மேலாதிக்க வெறித்தனத்தை இம்மண்ணில் நிலைநிறுத்திய கோட்பாடுதான் மனுஸ்மிருதியாகும். அதுமட்டுமின்றி, பார்ப்பனரல்லாத பிற வர்ணச் சமூகங்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமலும் புராண மாயைகளில் சிக்க வைத்து முடக்கி வைத்திருகிறது. மேலும், பிறப்பு முதல் இறப்பு வரையில் அவர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்துகிறது. அந்த அளவுக்கு மனுஸ்மிருதியானது கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம் - நரகம் போன்ற கற்பிதங்களின் மூலம், ஒருவகையான கருத்து மாயையினை உருவாக்கி சுயசிந்தனைக்கு இடமில்லாமல் தடுத்து வைத்திருக்கிறது. அத்துடன், மனுதருமத்தை மீறும் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் அளிக்கப்படும் தண்டனைகள் மூலம் ஒரு பேரச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது.........
அக்காலத்தில், மன்னர்களை வளைத்துப் போட்டு மனுச்சட்டத்தையே அரசமைப்புச் சட்டமாக ஏற்கச்செய்து அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினர். அதன்மூலம் சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்குக் கல்வியை மறுத்து அவர்களை மூடநிலையிலேயே கிடக்கவும் நீடிக்கவும் செய்தனர்..........
அத்துடன், மனுஸ்மிருதி, வேதங்கள் உள்ளிட்ட இந்துக்களின் புனித -மூல நூல்களைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வராமலும் தடுத்துவிட்டனர். அத்தகைய தடையினை மனுஸ்மிருதியே உருவாக்கி வைத்திருக்கிறது. அதாவது, சூத்திரர்கள் மற்றும் பெண்கள் வேதம் உட்பட எந்த புனித நூல்களையும் கற்கக் கூடாது என்றும் பார்ப்பனர்கள் அவர்களுக்குக் கற்பிக்கக்கூடாது என்றும் தடைவிதித்துள்ளது.
பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமை இல்லை என்பதால் அவர்களும் சூத்திரர்களே என்பது மனுவின் தீர்ப்பு. பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும் நரகத்திற்கு போவார்கள் என்று பயம் காட்டுகிறார் மனு. பார்ப்பனர், ஷத்திரியர் வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்கும் சேவை செய்வதுதான் சூத்திரர்களின் கடமை; அவ்வாறு பணிவிடைகள் செய்வதன் மூலமே சூத்திரர்களுக்குச் சொர்கம் கிடைக்கும் என்றும் கூறுகிறார் மனு.
அதுமட்டுமின்றி சூத்திர்களின் பிறப்பே மிகவும் கீழானது என்று வரையறுத்திருக்கிறார்.பெண்களைப் பற்றிய மனுவின் எண்ணம் மிக மிக இழிவானதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் உரை தொடுப்பின் ஒரு பகுதி......




Comments