தூத்துக்குடியில், மே தின சின்னம்! கவிஞர்,கனிமொழி கருணாநிதி-அமைச்சர் கீதாஜீவன் மலர்தூவி மரியாதை!!
- உறியடி செய்திகள்

- May 1, 2023
- 1 min read

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருந்தே மேதின நினைவு சின்னத்திற்கு தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், நாடாள மன்ற உறுப்பினர்கவிஞர் கனி மொழி கருணாநிதி, அமைச்சர் கீதாஜீவன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் மலர்தூவி மரியாதை செலுத்தினாார்கள்.

தமிழ்நாடும் மே-தினமும். பேரறிஞர் அண்ணா - கலைஞர்....
சென்னைக் கடற்கரையில் ம.சிங்காரவேலர்
1923ஆம் ஆண்டு கொண்டாடிய
மே நாள் விழா , இந்தியத் துணைக்கண்டம் முதன்முதலாகக் கண்ட விழா.
மே நாளைத் தொடர்ந்து கொண்டாடி
நிலை நிறுத்தியதில் தந்தைபெரியாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது.

தமிழ் நாட்டில் மே முதல்நாளை அரசு விடுமுறையாக 1967ஏப்ரலில் அறிவித்தவர் அறிஞர் அண்ணா.
"மே நாளுக்கு ஒன்றிய அரசு விடுமுறை அறிவிக்கவில்லை; தமிழ்நாட்டரசு அறிவித்தால், சிக்கல் வரும்" என்று
அதிகாரிகள் கூறிய போது பேரறிஞர்அண்ணா
"என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன்.
தன்னால் ஆனதைத் தில்லி செய்து கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்....

_அந்த வகையில்இந்தியத் துணைக் கண்டத்தில் முதன்முதலாக ( 1967இல் ) மேநாளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது தமிழ்நாட்டில்! அறிவித்தவர் அறிஞர் அண்ணா._
இந்தியா முழுவதும் மே நாளுக்கு ஊதியத்தியதுடன் அரசுவிடுமுறை எனும் ஆணை வருவதற்குக்
காரணமும், அதை அறிவித்ததும், அன்றைய தமிழ்நாட்டின்முதல் அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்தான் என்பது திரவிட இயக் வரலாறாக கூறப்படுகின்றது...

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மே, தினமானஇன்று (மே,01) தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல், ஆலோசனைகளின்படிதூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகஅலுவலகமான கலைஞர் அரங்கம் வளாகத்தில் தொழிலாளர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு இருந்தது. மே தினத்தை முன்னிட்டு திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள்க்குழுத்
துணைத் தலைவர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர்,கனிமொழி கருணாநிதி, கலந்து கொண்டு நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மற்றும் தூத்துக்குடி மாநகரமேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.கழக செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணியினர், உள்ளாச்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




Comments