அமைதி மனிதநேயம், மத நல்லிணக்கம் பெருகட்டும்! எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபராக் பக்ரீத் திருநாள் வாழ்த்து!
- உறியடி செய்திகள்

- Jun 29, 2023
- 1 min read

உலகில் மனிதநேயம், மதநல்லிணக்கத்தை பெருகச் செய்வோம், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பக்கீர்த்
திருநாள் வாழ்த்துச் செய்தி!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;!

இறை தூதர் இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் ஒரு திருநாளாக துல்ஹஜ் மாதம் 10ம் நாள் பக்ரீத் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது
ஹஜ் பெருநாள் அல்லது தியாகத்திருநாள் என்றழைக்கப்பட்டும் பக்ரீத் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமாக பண்டிகை. இதை ஹஜ் திருநாள் என்றும் கூறுவர்!.
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உவகையுடனும் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படும் இந்நன்னாள் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை நமக்கு உணர்த்துகிறது. மக்களின் அறியாமையை அகற்றி அவர்களை விழிப்புணர்வூட்டுவதிலும், ஏதேச்சதிகார சக்திகளுக்கு எதிராக போராடுவதிலும் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் அறிவாற்றலும், துணிச்சலும், தியாகமும், அர்ப்பணிப்பும் நமக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளன.
தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்நன்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திடவும், நாட்டு மக்களுக்கு எதிரான பாசிச ஏதேச்சதிகார சக்திகளை வீழ்த்திட நாம் சபதமேற்போம்.

அனைத்து மக்களிடையேயும் அன்பு, பாசம், சகோதரத்துவத்தை ஓங்கச் செய்து, உலகமெங்கும் அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படவும் இந்நாளில் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் எமது தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




Comments