விவசாய உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை! பயன்பெற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு!!
- உறியடி செய்திகள்

- Nov 4, 2022
- 1 min read

பருவமழை தொடங்கியுள்ள, பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு, தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைப்பு விடுத்துள்ளார்........
தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட செயலாளர, தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று,வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.....
தி.மு.கழகதலைவர்,தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவுபடியும், வழி காட்டுதல். நெறிமுறைகளின்படியும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு - தனியார் உர விற்பனை நிலையங்களில் 94.377. மெட்ரிக் டன் யூரியா, 48.060 டன் மெட்ரிக் டன் டி.ஏ.பி.35.225. மெட்ரிக் டன் பொட்டாஸ், 1.71.156. மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் கையிருப்பில் உள்ளது.
முதல்வரின் ஆலோசனை, வழிகாட்டுதலுக்கேற்ப பயிர் சாகுபடியை முன்னெரு யூகித்து, கணித்தும், உர தேவைகளை பற்றி ஒன்றிய அரசை வலியுறுத்தப்பட்டு தன் காரணமாக, நவம்பர் மாதத்தில் 1.46.720 மெட்ரிக் டன் யூரியா, 32.260, மெட்ரிக் டன் டி.ஏ.பி, 29.000 மெட்ரிக் டன் பொட்டாஷ் .78.350 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.........

எதிர்வரும் நாட்களில், பருவமழை, வெள்ளம், புயலால் ஏற்படும் மழைகளிலிருந்து உரங்களை பாதுகாக்கும் பொருட்டு, இறக்குமதி செய்யப்படவுள்ளஉரங்களை தூத்துக்குடி- மங்களூர் துறைமுகங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டுமென்றும், ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் உரவிநியோகம், தங்கு,தடைகளின்றி சீராக விநியோகம் செய்யவும், முதல்வர் அறுவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில்
சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டு வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு வருகிறது.
உரம் தொடர்பான புகார்கள்- மற்றும் கூடுதல் விபரங்களை விவசாயிகள்,தெரிந்துகொள்ள, 9363440360, என்ற அலைபேசி எண்ணிற்கு நேரடியாகவே - வாட்ஸ்-அப், மூலமாகவோ, வாய்மொழி மூலமாக உடனுக்குடன் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
.
ஆகவே, தமிழகமுதல்வர் தளபதி, மு.க.ஸ்டாலின் நேரடி கட்டுபாட்டிலும், கண்காணிப்பிலும் செயல்படும் கழக அரசு தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான அளவுக்கு உரம் கிடைக்க தனி கவனத்துடனும், அக்கரையுடனும் அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் துரிதமாக எடுத்துள்ளது.......
எனவே பயிர் சாகுபடிக்கு சாதகமான இச்சூழலலில் விவசாய பெருமக்கள் இவ்வாய்ப்புகளை பெற்று பயனடைய வேண்டுகிறேன்...
இவ்வாறாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.




Comments