கரூர் விழாவில் அமைச்சர் தகவல்! 50 ஆயிரம்,விவசாயிகளுக்குமின்இணைப்புவேளாண் கல்லூரியிலும் திடீர் ஆய்வு
- உறியடி செய்திகள்

- Nov 5, 2022
- 2 min read

கரூரில் நேற்று நடைபெற்ற வேளாண்மை கண்காட்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முதல்வரின் உத்தரவுப்படி 50. விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். பின்னர் வேளாண் கல்லூரியில் திடீர் அதிரடி ஆய்வும் மேற்கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்...
கரூரில் நேற்று சர்வதேச முருங்கை கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர். கடலூர் மாவட்ட செயலாளர். தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தரத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன். மின்சாரத்துறை அமைச் சர்,வி.செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.........
விழா தொடக்கத்தில், தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா குறித்து அனுப்பிய வாழ்த்துச் செய்திவாசிக்கப்பட்டது........
இதனை தொடர்ந்து,விழாவை தொடங்கிவைத்து அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் பேசியதாவது.....

தமிழ்நாட்டு அரசில் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் வேளாண்மை - உழவர் நலத்துறைக்கு மிக கூடுதல் அக்கரை செலுத்தி, எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளுக்கு எவ்விதமான குறைகளும், பாதிப்புகளும் ஏற்ப்பட்டு விடக்கூடாத வகையில், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தனி கவன த்துடன் வேளாண்துறை திட்டங்களை விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல் படுத்தி வருகின்றார்.
ஆட்சி பொருப்பேற்றபின் நமது முதல்வர் ஓர் ஆண்டுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கபடும் என்று கூறியதை நிறைவேற்றியதால், தமிழகத்தில் விவசாய உற்பத்தி பரப்பளவு, 5.லட்சம் ஏக்கர் அளவுக்கு கூடுதலாக விரிவடைந்துள்ளது.
மீண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்குமின் இணைப்பு வழங்கவும் முதல்வரின் உத்தரவுப்படி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த தமிழ்நாடுபட்ஜெட் கூட்டதொடரில் முருங்கை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மண்டலமாக 7. மாவட்டங்களை அறிவிக்கப்பட்டது........

அந்தவகையில் கரூர் மாவட்டத்தை கழக அரசு முருங்கை மண்டலமாக அறிவித்துள்ளது. முருங்கை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள, கரூர். திண்டுக்கல், தேனி, திருப்பூர், அரியலூர், மதுரை. தூத்துக்குடி. ஆகிய மாவட்ட பகுதிகளில் முருங்கை உற்பத்தி அதிகமாக உள்ளதால் இவற்றை முருங்கை மண்டலமாக அறிவித்து, இதற்கு ஏற்றுமதி ஆலோகர் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் , பணியிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் முருங்கை உற்பத்தி இப்பகுதியில் அதிகரிக்கும்.இதனை படிப்படியாக விரிவாக்கம் செய்யவும் ஆலோசிக்கப்படவும் உள்ளது..........
இன்றைக்கு தமிழ்நாட்டில் 53, ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடியும், விவசாயமும் நடைபெற்று வருகிறது. இதில் முருங்கை உற்பத்தி சாகுபடியை, உற்பத்தியை. மேலும் அதிகரிக்கச் செய்து, ஏற்றுமதியையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்...
இதில் உலகிற்கே மதிப்பு கூட்டபட்ட முருங்கை உணவுப்பொருட்களை முதன்மையாக வழங்குமிடமாக கரூர் மாவட்டம் திகழ, தமிழக முதல்வர் தளபதி.மு.க.ஸ்டாலின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறாக அவர் பேசினார்.........

அரசு வேளாண், முதன்மை செயலாளர் அருண்ராய்
கலெக்டர் பிரபுசங்கர், துணைவேந்தர்கள், ஆறுமுகம், கீதாலெட்சுமி, ஷேபனாகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
கண்காட்சி விழாவில் வேளாண்மைத் துறை சார்பில் 65. வகையிலான முருங்கை ரகங்களையும், முருங்கையில் தயாராகும் உணவுப்பொருட்களையும் காய்கறி விதைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 60. அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் கரூர் வேளாண்மை கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கல்லூரியின் கல்வி நிலைமுறைகள். விடுதிகளில், உணவு, கேட்டறிந்து, மாணவர்க ளுடன் உரையாடினார்........

இதனைகயடுத்துகல்லூரி துணைவேந்தரிடம், நடப்பு ஆண்டு - எதிர்வரும் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் தேவையான இதர அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து, கல்லூரி நிர்வாகத்திற்கு ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் கூறினார். ஆய்வின் போது, அமைச்சர்கள் த.மோ அன்பரசன், வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்கள்...
முன்னதாகசெய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இப்போது பருவமழை, புயல், தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் தனி கவனத்துடன் கண்காணித்து மழை வெள்ள பாதிப்புகள் குறித்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவழக்கை எடுக்க உத்தவிட்டுள்ளார். இதில் அனைத்து அரசுதுறைகளும் தீவிர பணியாற்றி வருகின்றார்கள். மழை, வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்பட்டால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
மணவை, எம்.எஸ்.ராஜா.....




Comments