அரசு திட்டப் பணிகளில் அதிகாரிகள் விரைந்து செயலாற்றுங்கள் அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்!!
- உறியடி செய்திகள்

- Dec 2, 2022
- 1 min read

.
விழப்புரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு! அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, செஞ்சிமஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பங்கேற்பு!!
தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருப்பேற்றபின் தமிழ்நாட்டில், வளர்ச்சி திட்டப் பணிகள் துரிதமாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்பட்டு வருவதுடன். இப்பணிகள் நடைபெறும் மாவட்டங்களில் தமிழக அமைச்சர் பெருமக்களும் நேரிடையாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, ஆலோசனைகளையும் சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிப் பணிகளை முடுக்கிவிட்டும் வருகின்றார்கள்........

நேற்று டிச.1.வியாழக்கிழமை பிற்பகலில்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டறங்கில், நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகராட்சி நிர்வாகத் திட்டம்ப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.தி.மு.கழக முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு தலைமை வகித்தார்.தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் விழுப்புரம் மாவட்ட செயலாளர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் க.பொன்முடி .சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் (கி) மாவட்ட செயலாளர், தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில்.......

தற்போது மாவட்டத்தில் மேற்க்கொள்ள வேண்டிய பல்வேறு மக்கள் நல திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுவரை செயல்படுத்தப்பட்ட பணிகள் - செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் விவரங்களை கேட்டறிந்து, உரிய வழிகாட்டு, ஆலோசனைகளையும் வழங்கினார்கள்....
இதனை தொடர்ந்து தமிழக அரசு-துறைகளின் சார்பிலான கோரிக்கை மனும் அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கப்பட்டது.
முன்னதாக துறை அதிகாரிகளிடம் நடைபெற்று வரும், வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதுடன் நேரடியாக தனி கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும், எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் விரைந்து, உரிய தரத்துடன் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் மென்று அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், நா.புகழேந்தி, இரா.லெட்சுமணன், ச.சிவக்குமார், ஏ.ஜே.மணிகண்டன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாச்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.




Comments