அமைச்சர் கே.என்.நேருவின் பெயருக்கு களங்கமா? நீதிமன்ற உத்தரவை மீறி!நடைபாதையை ஆக்கிரமிப்பு!
- உறியடி செய்திகள்

- Nov 28, 2022
- 1 min read

*அமைச்சர் மாண்புமிகு கே.என் நேருவின்* *பெயருக்குகளங்காமா* ? நீதிமன்ற உத்தரவை மீறி மணப்பாறையில் நடைபாதை
ஆக்கிமிப்பில் ஆதிக்கசாதியினர்.!!
சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார்!!!
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட, 16வது வார்டு, சேதுரத்தினபுரத்தில், பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்து இடையூறாக உள்ள பகுதிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மென்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொதுநல வழக்கு உயர்நீதிமன்ற மதுரையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுஆக்கிமிப்புகளை அகற்ற திருச்சி மாவட்ட நிர்வாகம், மணப்பாறை நகராட்சி, உள்ளிட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட்டது....

இதனை தொடர்ந்து, நடைவழி பொது பாதையைஆக்கிரமிப்பு செய்தவர்கள், திட்டமிட்டு, நகராட்சி நிர்வாகத்தின் மீது போலியான ஆவணங்களை காட்டி மணப்பாறை, சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். இதனை எதிர்த்து சமூக ஆர்வலர்களும், மணப்பாறை நகராட்சியும் எதிர்மனுதரார்களாக உரிய ஆவணங்களை சமர்பித்து ஆக்கிரமிப்பாளர்கள், பொது பாதையை ஆக்கிரமித்துள்ளதையும், இதனைஅகற்ற உயர்நீதி கிளை டிவிசன்பென்ஜ் நீதியரசர்கள் உத்தரவை செயலிழக்க செய்யும் நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் வழக்கில் இணைந்து கொண்ட நிலையில் வழக்கு மணப்பாறை சிவில் கோர்ட்டில் நிலுவையில் நடந்துவருகிறது.
இந்நிலையில்,உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவு, மணப்பாறை சிவில் கோர்ட் வழக்குநிலுவையிலிருக்கும்போதே, ஆறுமுகம் செட்டியார் மகன்கள், அதிமுக, பிரமுகர்கள்,குமார், முருகதாஸ், மீண்டும்,பொது பாதையை அடைத்து, கொட்டை போடும் முயற்சியில் தற்போது செயல்பட்டு வருவதாகவும், இது திட்டமிட்டு தி.மு.கழக முதன்மை செயலாளர். தமிழக நகராட்சி நிர்வாகம். குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்
உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி கலெ க்டர் பிரதீப்குமார், ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியர், நகராட்சி மண்டல அதிகாரிகள், மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா, ஆ.மைக்கேல்ராஜ், நகராட்சி ஆணையர். உள்ளிட்டவர்களுக்கு புகார்களை அனுப்பியுள்ளார்கள்.....




Comments