தி.மு.கழகத்தில் 1.கோடி உறுப்பினர்கள்இணைக்கும் பணி தீவிரபடுத்த அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!!!
- உறியடி செய்திகள்

- Apr 2, 2023
- 1 min read


தி.மு.கழகத்தில் மே லும் புதிதாக 1. பேரை இணைக்கும் பணியை தீவிரபடுத்த வேண்டும் என்று தி.மு.கழக முதன்மை ச்செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தி, ஆலோசனைகளை வழங்கி பேசினார்....
திருச்சி, சத்திரம் பஸ்ஸாண்டு அருகிலுள்ள கலைஞர் அறிவாலையத்தில் மத்திய மண்டல தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர்.சேலம் மண்டல பொருப்பாளர் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு கட்சியின்உறுப்பினர் படிவங்களை நிர்வாகிகளிடம் வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது....
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் சீறிய வழிகாட்டுதலின்படியும், பொதுச்செயலாளர், நீர்வழித்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் ஆலோசனைகளின்படியும் தற்போது 90 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட கழகத்தை மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை இணைத்து 2. கோடி பேரை இணைத்து.....


கழகத்தை வலுப்படுத்தி, திராவிட இனத்தையும், தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்மொழியையும், கலாச்சாரம், பண்பாடுகள் காக்கும் வகையில் தொடர்ந்து எதிர்காலத்திலும் நமது மக்கள் பணிகளை மென்மேலும் சிறப்பாகவும் வலுவுடன் செயலாற்ற வேண்டும் என்கிற அடிப்படை நோக்கத்துடன், நமது கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு ஏற்றவாறு கழகத்தில் புதிய உறுப்பினர்களையும், விடுப்பட்டப் போன கழகத்தினரையும் இணைத்திடும் பணியை திவீரபத்தி கழகத்தின் அனைத்துத்தரப்பு நிர்வாகிகளும் சார்பு அணியினரும் பணியாற்ற வேண்டும்.


சட்டமன்ற தொகுதிவாரியாக இப்பணியை பொருப்புணர்ந்தும் நமது கடமை உணர்ந்தும், கழகத் தலைவர் தளபதியாரின் அறிவுறுத்தல் படி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் பணிகளை விரைவுபடுத்திடவேண்டும். இதில் இளைஞர்களையும் பெருமளவில் இணைத்து கழகத் தலைவரின் தலைமையில் நமது மக்கள் பணிகள் சிறப்புறம் வகையில், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநகர்மன்ற, அனைத்துத்தரப்பு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய கழக மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக பங்கெடுத்து பணியாற்ற வேண்டும்,

மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர, பேரூர், கிளைகழகத்தினர், சார்பு அணியினர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறாக அவரர் பேசினார்.
மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன், மாநகர தி.மு.கழக செயலாளர் மேயர் மு.அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.பழனியாண்டி. தொகுதி பொருப்பாளர்கள் சந்திரசேகரன். உத்திரபதி செந்தில், டோல்கேட் சுப்பிரமணியன், கண்ணன், முன்னால் எம்.எல்.ஏ.க்கள், அன்பில் பெரியசாமி, பரணிக்குமார் உட்பட மண்டல, மாவட்ட, நகர. ஒன்றிய, பேரூர் கிளைகழக, அனைத்து தரப்பு சார்பு அணியினர், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.




Comments