சுற்றி சுழலும் அமைச்சர் கே.என்.நேரு!திருச்சியில் வளர்ச்சித்திட்டங்கள் தீவிரம்! பொதுமக்கள் பாராட்டு!!
- உறியடி செய்திகள்

- May 29, 2023
- 2 min read


மணவை எம்.எஸ்.ராஜா....
சுற்றி சுழன்று பணியாற்றும் அமைச்சர் கே.என்.நேரு வளர்ச்சித்திட்டப்பணிகள் தீவிரம்! பொதுமக்கள் பாராட்டு!
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. - குறள்
விளக்கம்...
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
''முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்...

தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,
தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது தொகுதியான திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிட வளாகத்தில் பொதுமக்கள் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் புதிய இ.சேவை மையத்தை மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் நடைபெற்றுவந்த , திருச்சிரயில்வே_ஜங்சன் அரிஸ்டோமேம்பாலம் பணிகள் முடிவுற்ற நிலையில்,
அரிஸ்டோ மேம்பாலத்தையும், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அணுகு சாலையையும் இன்று தி.மு.கழக முதன்மைச்செயலாளர் சேலம் மாவட்ட பொறுப்பாளர். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்து, துவக்கிவைத்தார்.

இதனைதொடர்ந்து
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 , வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டியும் தொடங்கிவைத்தார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, நம் தாய்நாட்டிற்காக போராடி தான் இன்னுயிரை துறந்து வீரமரணமடைந்து பாட்டாலிக்கின் கதாநாயகன் என்று பாராட்டப்பட்டு, வீர்சக்கரா விருது பெற்ற மேஜர்சரவணன் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மேஜர் சரவணனின் சகோதரி மருத்துவர் சித்ரா மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள அவரது நினைவுத் தூணில் உள்ள திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கராயி அம்மன் கோவில் அருகே குடமுறுட்டி ஆற்றின் குறுக்கே ௹.1.65. கோடி மதிப்பீட்டில் புதிய இரும்பு. பாலம் அமைக்கும் பணியை தொடங்கிவைத்து, திருச்சி அருகே அம்மாபேட்டையில் ரூ.22.65. லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்,
மாநகர மேயர் மு.அன்பழகன் கலெக்டர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்.மாவட்ட தி.மு.க துணைச்செயலாளர் முத்துச்செல்வம், நவல்பட்டு விஜி, டோல்கேட் சுப்பிரமணியன் தில்லைநகர் கண்ணன் மற்றும் உள்ளாச்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
அமைச்சர் கே.என்.நேரு சுற்றிச் சுழன்று மிகுந்த சுறுசுறுப்புடன்ப ணியாற்றி அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை செயல்படுத்தி வருவதாக பொதுமக்கள் உற்சாகமுடன் அமைச்சரின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை வெகுவாக பாராட் வருகின்றனர்.




Comments