top of page
Search

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு! 3.வது நீதிபதி டி.கார்த்திகேயன் தீர்ப்பு முழுவிபரம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 16, 2023
  • 4 min read
ree

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா..


செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பின் 20 முக்கிய அம்சங்கள்!


அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு! 3.வது நீதிபதி டி.கார்த்திகேயன் தீர்ப்பு முழுவிபரம்!


"போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் செந்தில் பாலாஜி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.!


சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.!


கடந்த ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில், மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறை வாதத்துக்கு பதில் வாதத்துக்காக வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார். வெள்ளிக்கிழமை விசாரிக்க ஆரம்பித்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டார். மதிய உணவு இடைவெளிக்குச் செல்லாமல், சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்!

ree

போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்.

பணம் யார் மூலமாக யாரிடம் சென்றது. அதை மீட்டு எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமலாக்கத் துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா எனபது குறித்து இரண்டு தரப்பும் வாதங்களை முன்வைத்தனர்.

அமலாக்கத் துறையின் உரிமையை பறிக்க முடியாது.

அமலாக்கத் துறையை காவல்துறையினராக கருத முடியாவிட்டாலும் அவர்கள் புலன் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது!.


அமலாக்கத் துறையினர் காவல்துறையினர் அல்ல என்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்துக்கு மாற்று கருத்து இல்லை.

செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான்; கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது.விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டால் காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.

தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும்.!

ree

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கிய பரத சக்கரவத்தி உத்தரவுதான் எனது உத்தரவும்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்ற காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என்பதை பொருத்தவரை, சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும்.

செந்தில் பாலாஜியின் உடல் நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது!


8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டும் ஒரு நாள் கூட காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கவில்லை.

நீதிமன்ற காவல், நீதிமன்ற காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட தனித்தனி மனுக்கள் மீது அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுக்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும். காலை முதல் அவர் வீட்டில்தான் அமலாக்கத் துறையினர் இருந்துள்ளனர்.!


காலை முதல் நடத்தப்பட்ட விசாரணை, ஆவணங்கள் சேகரிப்பு, வாக்குமூலம் என அனைத்தும் நடைபெற்றபோது செந்தில் பாலாஜிக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

கைது குறித்து செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூற முடியாது.!


இந்த ஆட்கொண்ர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.

இந்த தீர்ப்பை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ree

செந்தில் பாலாஜி தற்போது நீதிம்னற காவலில் தான் உள்ளார். பல முறை சம்மன் அனுப்பியும் அவர் சில முறை ஆஜராகியுள்ளார். சில முறை ஆடிட்டர்க்ள் ஆஜராகியுள்ளனர்.

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை செந்தில் பாலாஜி எதிர்த்து வழக்கு தொடரவில்லை.

கைது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.!


கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நிதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்கிறேன்!


ரிமாண்ட் செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது.!


செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருப்பதால், எப்போதிலிருந்து நீதிமன்ற காவல் நாட்களாக கருத வேண்டும் எனபதை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.

3-வது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பின் முழு விவரம்

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்குட்பட்டவர்தான் என்றும், அவருடைய கைதும், நீதிமன்ற காவலும்சட்டப்பூர்வமானது என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ள 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், இந்த வழக்கில் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அளித்துள்ள தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி எஸ்.மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.!

ree

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 4-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பளித்திருந்தனர். இதனால் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவுப்படி 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரிக்கப்பட்டது.!


நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக கடந்த 11-ம் தேதி செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோரும், 12-ம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.


தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த டி.கார்த்திகேயன் தீர்ப்பு அளித்தார்!

ree

அப்போது கபில் சிபில் ‘எனக்கு உடல்நிலை சரியில்லை. நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் சிறிது வலி உள்ளது’ என்றார். அதையடுத்து நீதிபதி, ‘கபில் சிபிலின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை சிறிது நேரம் தள்ளிவைக்கிறேன். இது ஒன்றும் பள்ளியோ, கல்லூரியோ அல்ல. எனவே நீங்கள் சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு வாதிடுங்கள்’ எனக்கூறி கபில் சிபிலுக்கு ஓய்வு கொடுத்தார்.

சிறிது நேர ஓய்வுக்குப்பிறகு வாதிட ஆரம்பித்த கபில் சிபில், ‘உங்கள் முன்பாக வாதிட எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஒரு வழக்கில் உங்கள் முன்பாக வாதிட ஆசைப்படுகிறேன்’ என்றார். அதற்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயனும், ‘உங்கள் வாதத்தைக் கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.!


நீதிபதி கார்த்திகேயன் உணவு இடைவெளிக்கு கூட தனது இருக்கையை விட்டு எழுந்து செல்லவில்லை. தண்ணீரும் அருந்தவில்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தீர்ப்பை தனது சுருக்கெழுத்தாளர் எழுத, வாசிக்கத் தொடங்கிய நீதிபதி, இருதரப்பின் வாதங்களையும் ஒப்பிட்டு, மாலை 4.30 மணிக்கு முடித்தார். காலை முதல் மாலை வரை 6 மணி நேரம் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்து நீதிபதி தீர்ப்பளித்ததால், தீர்ப்பை குறிப்பெடுத்த சுருக்கெழுத்தர்கள் இருவர் மட்டும் இடையே உணவு இடைவேளைக்காக மாறிக்கொண்டனர். வழக்கை விசாரித்து முடித்த மறுகணமே திறந்த நீதிமன்றத்திலேயே வைத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தனது தீர்ப்பில், ‘‘அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கான அதிகாரம் இல்லை என்றாலும் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை அமலாக்கத்துறை கைது செய்ததும், அமர்வு நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைத்ததும் சட்டப்பூர்வமானது தான் என்பதால் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பை நானும் உறுதி செய்கிறேன்.!

ree

ஒருவரை கைது செய்தால் அந்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோர வேண்டியது அமலாக்கத்துறையின் கடமை. அதைத்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். ஆனால் அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியும், ஒருநாள் கூட அவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சி செய்யாதது ஏற்புடையதல்ல.

அதேபோல கைதுக்கான காரணத்தை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுவதையும் ஏற்க முடியாது!.

ree

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள காலகட்டத்தை நீதிமன்ற காவலாக கருதக்கூடாது. அவர் முழுமையாக குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம்.

எனவே செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி மேகலாவால்தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையல்ல.!

என்னுடைய இந்த தீர்ப்பை தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன். செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து காவலில் எடுத்து விசாரிப்பது என்பதை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வே முடிவு செய்யும்’’ என குறிப்பிட்டுள்ளார்.!


இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாதம் அவகாசம் வழங்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.!

உறியடி செய்திக்குழுவினர்..

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page