top of page
Search

அமைச்சர் சு.முத்துசாமியின் அணுமுறையால்! சர்ச்சைகளிலிருந்து மீல்கிறதா? அரசு மதுபான கடைகள் விவகாரம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 27, 2023
  • 3 min read
ree

மூத்தப் பத்திரிக்கையாளர், ராஜா....



ஈரோடு மேட்டுக்கடை அடுத்த கதிரம்பட்டியில் செயல்பட்டு வரும் 3826 எண் கொண்ட டாஸ்மாக் கடையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்!


தமிழ்நாட்டின் அரசு மதுபான (டாஸ்மாக்)ஊழியர்கள் புதிய உற்சாகம்!


அமைச்சர் சு.முத்துசாமியின் அணுமுறையால்! சர்ச்சைகளிலிருந்து மீல்கிறதா? அரசு மதுபான கடைகள்!



சர்ச்சைகள் ,குற்றச்சாாட்டுகள், என தொடர்ந்து அரசுக்கும், முதல்வருக்கும் பல்வேறு வகைகளில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் தனது நீண்ட நாளைய நிர்வாக அனுபத்தால் எளிமையாகவும், துரிதமாகவும் சலைமில்லா போக்கை ஏற்படுத்தியதும், இதில் அமைச்சர் சு.முத்துசாமியின் அணுகுமுறைகளும் பாராட்டுக்குரியதாகவே பேசப்படுகின்றது!


.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அதிமுக, ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராகயிருந்த செந்தில்பாலாஜி மீதான குற்றசாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறையினரின் அதிரடி நடவடிக்கையால், செந்தில்பாலாஜியின் மீதான தொடர் டார்ச்சர்களால், மருத்துவமனையில் அனுமதி பட்டு, ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த மின்சாரத்துறை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசமும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துரை, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வசமும் ஒப்படைக்கப்பட்டு செந்தில் பாலாஜி, துறையில்லாத அமைச்சராக செயல்பாடுவார் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது!

.

இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செந்தில்பாலாஜி வசமிருக்கும்போது கடும் விமர்சனத்திற்கும் பல்வேறு குற்றசாட்டுக்களுக்கும் உட்பட்ட துறையாகவேயிருந்து வந்தது!

ree

எல்லாவற்றிக்கும் மேலாக டாஸ்மாக்கின் பணியாளர்கள் பலரும் நேரடி குற்றச்சாட்டுகளை கூறிவந்தது சர்ச்சைகளை மேலும் அதிகரிக்கும் வகையில், அடுத்தக்கட்டத்திற்கு இதன் விமர்சன குற்றசாட்டுகளை எடுத்துச் சென்றது என்கிறனர் அரசியல் பார்வையாளர்களும், விமர்சர்களும்......!


இந்நிலையில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையையும் கூடுதல் பொருப்பாக பெற்ற, ஈரோடு கிழக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை,அமைச்சர் சு.முத்துசாமி இத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை முன் எடுக்க தொடங்கியிருப்பது, அரசு மதுபான கடை பணியாளர்கள், உள்ளிட்ட பலரின் கவனத்தை ஈர்த்ததுடன், புதியதொரு நம்பகத்தன்மையும் ஏற்படுத்தியுள்ளதாகவே சம்மந்தபட்ட தொடர்புடைய அனைத்துத்தரப்பினரும் கூறுகின்றனர்....!


பொதுவாக அமைச்சர் சு.முத்துசாமி தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள், கட்சி தொண்டர்களில் தொடங்கி, அரசு அதிகாரிகள், மாற்று கட்சியின் ஆதரவாளர்களைக் கூட தன்னை மிக எளிமையாக சந்திக்கக்கூடிய வகையில்தான் அவரின் செயல்பாடுகளும், அணுகுமுறைகளும் மிக, மிக எளிமையான முறையில் இருந்ததால், தான் அவரின் பேச்சுக்கு என்று ஒரு தனி மரியாதை இன்றளவும் மக்கள் மத்தியில் உள்ளதாக கூறுகின்றனர் கட்சியிலும், அரசியல் வட்டாரத்திலும் விபரமறிந்த பலர்....!

ree

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள்படி

அரசு மதுபான கடைகள் முறைகேடுகள் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளியை ஏற்பத்தும் வகையில் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்தார் அமைச்சர் அமைச்சர் முத்துசாமி....!


முதல் கட்டமாக, சென்னையிலுள்ள தனது முகாம் அலுவலகம், துறை அலுவலகங்களில், டாஸ்மாக் அதிகாரிகளையும், டாஸ்மாக் தொழிற்சங்க த்தினரையும், இத்துறை சார்ந்த பிற சார்புகொண்டோரையும் நேரில் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சம்மந்தப்பட்ட தரப்பினர்களின் குறைகளையும், குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் எடுத்த எடுப்பிலே கூற வைத்ததுதான், இவர்களின் மிகப்பெரிய நம்பிக்கைக்கு காரணம் என்கின்றனர் இத்துறை சார்ந்த பலர்.....!

ree

அதேசமயம் அரசுக்கு இத்துறை மீதான சர்ச்சை கருத்துக்கள் எழக்கூடாது, பணியாளர்கள் எந்த சூழலிலும் முறைகேடு குற்றசாட்டுக்களுக்குள் சிக்கிவிடக்கூடாது.

குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் நிலையில், யாராகயிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறை, கோரிக்கைகளை தன்னிடம் கூறலாம், அதன்பேரிலான உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பணியாளர்கள் பணிக்கு உத்திரவாதமும் அளித்த அமைச்சரின் பேச்சால் ஏதோ! புற்றுயிர்பெற்றவர்களாக மிகுந்த உற்சாகத்திலுள்ளனர் துறை சார்ந்த பணியாளர்கள், அதிகாரிகள் என்கின்றனர் அவ்வட்டாரத்தினர் ...!


அரசின் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தும் விதமாக ஈரோட்டில்

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி...

அரசு மதுபான அதிகாரிகள் முதல் விற்பனையாளர்கள் வரை அவர்களது கோரிக்கைகள், நிறை - குறைகள் கேட்டறியப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதபடுத்தப்பட்டுள்ளது. மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதுடன் கூடுதல் விலைக்கு விற்காத நிலையினை உருவாக்கவும் தொடர்ந்து முயற்சித்தும் வருகின்றோம்.

அரசால் சமீபத்தில் மூடப்பட்ட 500 கடைகளில், புகார்கள் இல்லாத கடைகளையும் மூடியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர் அவற்றை உரியமுறையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மதுபான கடைகளில், விற்பனையை அதிகபடுத்த வேண்டுமென்பது அரசின் நோக்கமல்ல, அதேபோல மூடப்பட்ட மதுபான கடை ஊழியர்களை வெளியே அனுப்பும் எண்ணமும் அரசுக்கு இல்லை....

என்று அமைச்சர் முத்துசாமி கூறியது குறிப்பிடதக்கது!

.

திமுக அரசு பொறுப்பேற்றாதில் இருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை

அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்தார்.

ree

இதன் தொடர்ச்சியாக

மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது தொடர்பாக தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்த நிலையில், ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் மேட்டுக்கடை பகுதியில் இயங்க வரும் அரசு மதுபான கடை மற்றும் மதுபான பார் உள்ள கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வைத்துறை அமைச்சர் சு முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்!.


அப்போது, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறதா இந்த மதுபான கடையில் பார் வசதிக்கு உரிய அனுமதி பெற்றுள்ளனரா,

மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளதா என துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் அதிரடியான ஆய்வும் மேற்கொண்டார்.!

ree

மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடைகள் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை அருகே கடைகள் உள்ளதா என ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி. டாஸ்மாக் மதுபான கடையில் உள்ள ஊழியர்கள் இரவு நேரத்தில் பணத்தை எடுத்து செல்வதில் உள்ள சிரமங்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்து, அதுகுறித்து பணியாளர்கள் தரப்பில் அமைச்சரிடம் கூறிய கோரிக்கைகள் மீது உரிய துரித நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.!


அமைச்சர் சு.முத்துசாமி, ஆய்வு என்கிற பெயரில் தனது பணியை முடித்துக்கொள்ளாமல், அரசு மதுபான கடைகளின் பணியாளர்கள் மீதும், மனிதநேயத்துடன், தங்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் முயற்சியை எடுத்துவரும் அமைச்சரின் செயல்பாடுகள் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மத்தியில் மன அமைதியையும், புதிய உற்சாகத்தையும் ஏற்பத்தியுள்ளதாகவே கருதகின்றனர் சம்மந்தப்பட்ட பணியாளர்கள்!


சர்ச்சை ,குற்றச்சாாட்டுகள், என தொடர்ந்து அரசுக்கும்

முதல்வருக்கும் பல்வேறு வகைகளில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் தனது நீண்ட நாளைய நிர்வாக அனுபத்தால் எளிமையாகவும், துரிதமாகவும் சலைமில்லா போக்கை ஏற்படுத்தியதும், இதில் அமைச்சர் சு.முத்துசாமியின் அணுகுமுறைகளும் பாராட்டுக்குரியதாகவே பேசப்படுகின்றது!



மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page