நிமிடத்திற்கு நிமிடம் திக்திக்! பக் பக்! பிரேக்கிங் நியூஸான கோவில் திருவிழா! கரூர் அருகே பரபரப்பு!!
- உறியடி செய்திகள்

- May 22, 2023
- 3 min read



ஆசிரியர்,மணவை எம்.எஸ்.ராஜா....
நிமிடத்திற்கு நிமிடம் திக்திக்! பக்பக்!!
பிரேக்கிங் நியூஸான கோவில் திருவிழா!
கரூர் அருகே பரப்பரப்பு!!
குளித்தலை டி.எஸ்.பி.ஸ்ரீ,தரன் எச்சரிக்கையால் இயல்புநிலையில்! திகிலூட்டிய, பரப்பு கோவில் திருவிழா சம்பவம்!
கரூர் மாவட்டம் தோகமலையை அடுத்த தெலுங்கபட்டியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா, முறைப்படி சவனம் என்கிற உத்தரவு (கவுளி) கேட்டு அதன் பின் இரு வார கால அவகாசத்தில் 5- முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலத்தவர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள். கிராம கோவிலாகயிருந்தாலும் 24. மனை தெலுங்குசெட்டியார்களின் பங்களிப்புமிக முக்கிய ஒன்றாகும்.
(பகவதி என்பதன் பொருள் பகைவர்களையும், கயவர்களையும் வதம் செய்து தன்னை நம்பி வருவோர்களுக்கு அருள்பாலித்து திருப்பங்களை ஏற்படுத்துவாள் பகவதி அம்மன் என்கிற அதீத நம்பிக்கையும் இவர்களுக்கு காலம்காலமாக தொடரும் ஒன்றாகும்)


இத்திருவிழாவில் வானவேடிக்கை நிகழ்வுகளும், குட்டிக்குடி நிகழ்வும் குறிப்பிடதக்க ஒன்றாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பிரபல திருச்சி தொழிலதிபர் ஆர்.எஸ்.என்கிற ஆர்.சங்கிலி முத்துசெட்டியார் உள்ளிட்ட 24. மனை தெலுங்கு செட்டியார்கள் முன்னின்று நடத்தியமிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகவே இன்றளவும் பெருமையுடன் இப்பகுதி மக்களால் பேசப்படுகின்றது. இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான வானவேடிக்கை நிகழ்வுஎன்பது மிகவும் பெயர் போன ஒன்றாகவே கருதப்படுகின்றது.இதனை காண, 50 கிலோமீட்டர் சுற்றுப்புற கிராமத்தினர் திரள வருவதும் கண்டு களிப்பதும் வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல்.பகவதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவது சம்மந்தமான கவுளி உத்தரவு கேட்கும் நிகழ்வு முன்னால் நாட்டாண்மை தொப்பையன் செட்டியார் வகையறாவை சேர்ந்த குமரேசன் செட்டியார், அனைத்துச் செட்டியார் பேரவைத் துணைத்தலைவர், பிரபல தொழிலதிபர் திருச்சி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 24. மனை தெலுங்கு செட்டியார்கள் உள்ளிட்ட கிராம மக்கள் முன்னிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்நடைபெற்றது.
இதில் முறைப்படி திருவிழா நடத்துவதற்கான கவுளி உத்தரவு கிடைக்க, திருவிழாவுக்கான ஏற்பாடுகளும் கலைகட்ட தொடங்கியது.

தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடக்கத் தொடங்கியது.
இந்நிலையில். 24. மனை தெலுங்கு செட்டியார்களில் அதிருப்தியான ஒரு பிரிவினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேற்படி திருவிழாவில் தங்கள் தரப்பினர்கள் புறக்கணிப்பு செய்யப்படுவதாக முறையீடு செய்ததாக கூறப்படுகின்றது.இதனை தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தோடு இணைந்து விழாவை நடத்த அறிவுறுத்தி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று மே.21. ஞாயிற்றுக்கிழமை, தெலுங்க பட்டி நடுத்தெருவிலுள்ள சாவடிக்கு பூஜைக் கூடை எடுத்துச் செல்வதில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருதரப்பினர் மத்தியில் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்த நிலையில், திடீரென இன்று காலை ஒரு தரப்பினர்.சுவாமி பூஜைக் கூடைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டுக்களை உடைத்துவிட்டு, அவற்றினை எடுத்துச் சென்றதாகவும், அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துவந்ததாகவும், கூறப்படுகின்றது. இதனால்,எதிர்தரப்பினர், கிராம மக்கள் இடையே மீண்டும் பதட்டம் தொற்றிக்கொண்டது.


இதனை தொடர்ந்து இருவருக்குமிடையே யான கருத்து முரண்பாடு மேலும் அதிகரிக்கத் தொடங்கி பரப்பும் தொடர வே செய்தது ஒரு கட்டத்தில் சட்டம் ஒழுங்குமீறல்கள் எழுக்கூடுமோ என, கரூர் எஸ்.பி.சுந்தரவதனம் அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் சம்பவ இடத்தில் முகாமிட்டு விழா நிகழ்வுகளை கவனிக்கத் தொடங்கினார்.
நேரமாகமாக இருதரப்பினருக் கிடையேயான கருத்துவேறுபாடுகள் தொடரவே, பதட்டமும் அதிகரிக்க தொடங்கியது.


இதனை யடுத்து குளித்தலை டி.எஸ்.பி. ஸ்ரீதரன், ஒலிபெருக்கி மூலமாக அனைவரும் ஒருங்கிணைந்த, ஒற்றுமையுடன் விழாவை நடத்துங்கள். சட்டம் ஒழுங்குக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடவடிக்கையில் எவரேனும் ஈடுபட் டால், காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

இதனையடுத்து கருத்துவேறுபாடுகளுடைய இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தையில், நாட்டாண்மை குமரேசன் தரப்பினர், இருதரப்பினரும் இணைந்து திருவிழா நிகழ்வுகளை முன்னெடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து வழக்கம்போல நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வானவேடிக்கையுடன் திருவிழாவின் முக்கிய நிகழ்வான . தட்டான் தோப்பு எனுமிடத்தில் கரகம் பாலித்தல் நிகழ்வு நடைபெற்று, கருப்பண்ணசுவாமி முன் செல்ல, ஸ்ரீ பகவதி அம்மன் தேர்பவனி வானவேடிக்கையுடன் கோவிலை வந்தடைந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்,பொங்கல்
வைக்கப்பட்டு, குட்டி குடித்தல் நிகழ்வுகளும் நடந்தேறின!

கடந்த காலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவில் விழா, இப்போது மிகுந்த சர்ச்சைகளுக்கிடையே ஏதோ பெயரளவில் மட்டும் நடைபெற்றதாக கூறுகின்றனர் இவ்விழா பற்றி விபரமறிந்த கிராமத்தினர்.
ஆக சீரும் சிறப்பாக இது நாள்வரைநடைபெற்று வந்த தெலுங்கபட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழா நிகழ்வுகள் கடந்த சில தினங்களாக நிமிடத்திற்கு நிமிடம், காணொலி ஊடகங்களில் பதட்டமான (FALS NEWS)முக்கிய அவசர செய்தியைப் போலவே பீதியை கிளப்பும் வகையில் தொடந்து, ஒரு வழியாக, விழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் ஒட்டுமொத்த கிராமமும் நிம்மதி பெருமூச்சு விட்டது என்றே கூறகின்றனர் இப்பகுதியினர்.
இக்கோவில் திருவிழா ஏற்பாடுகளின்போது , கோவிலுக்கும், கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கும் இடையூறாக இருந்ததாக கூறப்படும், வழியோரம் அரசு நிலத்திலிருந்த சிறு கனிமம் சுமார் 5 டன் கற்களை உரிய அனுமதி பெறாமல், வெடிவைத்து உடைத்து நாட்டாண்மை குமரேசன் தன்வசம் எடுத்துச் சென்றதாகவும் கோவில் திருவிழாவின்போது, காவல்துறையினை பணிசெய்யவிடாமல், இடையூறுகள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்ற நிலையில். காவல்துறையினர், பொறுமையுடன் உணர்ச்சிவசப்படாமல், சமயோகிதமாகநடந்து கொண்டதும் இவ்வளவு சர்ச்சைகள் மத்தியில் இத்திருவிழா அசாம்பா விதங்கள் பெரிய அளவில் இன்றி நடந்து முடிந்ததும். இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையில் காவல்துறையினரின் மென்மையான நடவடிக்கைகளாகவே தொடர்ந்ததும், கடந்த காலங்களில் இதே கிராமத்தை சேர்ந்த சிலரின் மீது உள்நோக்கத்துடன் வாங்கும் வகையில், தோகைமலை காவல்துறை, வருவாய்துறையினர் நடந்துகொண்டதாகவும் இப்பகுதியினரால் கூறப்படும் குற்றசாட்டுக்களையும் சட்டம்- ஒழுங்கு என்பது எளியவர்களை அடக்கும் ஆயுதமாகவே அதிகாரிகளின் செயல்பாடுகள்உள்ளது என்கிற இப்பகுதி மக்களின் குற்றசாட்டுக்களை எளிதில் கடந்து செல்லவும்இயலவில்லை!
சட்டம் என்பது இருட்டரை என்று கூறிய பேரறிஞர் அண்ணாவின் நினைவுகளை மீண்டும் நினைவூட்டியுள்ளது தெலுங்கபட்டி
கோவில் திருவிழா சம்பவங்கள்!
என்றேதான் நினைக்கத் தோன்றுகிறது!!
திருச்சி வின்ஸி ....




Comments