புதுக்கோட்டையில் நவீனமயமாகும் அரசு அச்சகம்! அமைச்சர்கள் ஆய்வு! பணிகளும் முடுக்கிவிடப்பட்டது!
- உறியடி செய்திகள்

- Aug 18, 2023
- 2 min read

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா
புதுக்கோட்டையில் நவீனமயமாகிறது அரசு அச்சகம்! அமைச்சர்கள் ஆய்வு பணிகளும் முடுக்கிவிடப்பட்டது!
புதுக்கோட்டை
மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு
மணிமண்டம் அமையவிருக்கும் இடத்தினை
அமைச்சர்கள் எஸ்.ரகுபதி -
.மு.பெ.சாமிநாதன் சிவ.வீ.மெய்யநாதன்- மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ள இடத்தினையும், புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தின் செயல்பாடுகளையும், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்!
இந்நிகழ்வுகளின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, ஆகியோர் உடனிருந்தார்கள்.
புதுக்கோட்டையில் 1861 ஆம் ஆண்டு முதல் அரசு பொது அலுவலக வளாகத்தில், செயல்பட்டுவரும் அரசு கிளை அச்சகத்தின் மூலம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நிலைப்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்படாத படிவங்கள் மற்றும் பதிவேடுகள் பல்கலைகழக விடைதாள்கள், தேர்வுத்துறை மற்றும் தேர்தல் துறை படிவங்கள், மருத்துவத்துறை, காவல்துறை, நிதிவிதித்தொகுப்பு மற்றும் கருவூலத்துறை ஆகிய துறைகளுக்குரிய படிவங்கள் மற்றும் பதிவேடுகள் இந்த அச்சகத்தின் மூலம் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அமைச்சர் களால் புதுக்கோட்டை கிளை அச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.!
மேலும் இங்கு நிறுவப்பட்டுள்ள புதிய அச்சு இயந்திரங்கள் குறித்தும், அச்சடிக்கப்பட்டுவரும் படிவங்கள், பதிவேடுகள் குறித்தும், இந்த அச்சகத்திற்கு அதிவிரைவாக அச்சிட தேவையான அதிநவீன அச்சு இயந்திரங்கள் குறித்தும், கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் குறித்தும், கட்டுமானப் பணி முன்னேற்றம் குறித்தும், அமைச்சர் பெருமக்களால் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும், தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம். உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னர் ராஜகோபால தொண்டைமான் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்பதற்காக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி , மு.பெ.சாமிநாதன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.!

மேலும் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களுக்கு ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை மிகவும் கலைநேர்த்தியுடன், சிறப்பான முறையில் மேற்கொள்ளவும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வகையில் மன்னரின் வாழ்க்கை வரலாற்றை இக்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மன்னரால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டும், போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டும் காண்போரை கவரும் வகையில் பணிகளை மிக நேர்த்தியாக மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பெருமக்களால் அறிவுறுத்தப்பட்டது.!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்த்திருத்த பெண்மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 10.05.2023 அன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவச்சிலைக்கு, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன் , சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!

இந்நிகழ்வுகளில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மருத்தவக்கல்லுாரி முதல்வர் (பொ) மரு.ராஜ்மோகன், மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர்/முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகர், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, உதவி செயற்பொறியாளர் (பொ.ப.து.) சிந்தனைசெல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, உதவி பொறியாளர் பாஸ்கர், அரசு கிளை அச்சகத்தின் துணை பணி மேலாளர் ராஜ்குமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.பாரதி, க.மதியழகன், ஆ.செந்தில், சு.சண்முகம், என்.சாத்தையா, மு.க.ராமகிருஷ்ணன், எம்.பரமசிவம், என்.சேட்டு, ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, சி.சண்முகம், கே.பி.அய்யப்பன், எம்.எம்.பாலு, மகேஸ்வரி சண்முகநாதன், கே.சி.சிவக்குமார், கே.எம்.சுப்பிரமணியன், க.நைனா முகம்மது, வே.ராஜேஸ், வி.ஜி.ஆர்.மணிவண்ணன், வடவாளம் க.செ.மணிமாறன், வெற்றிச்செல்வன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.




Comments