பருவமழை பாதிப்புகளை! சொல்லி எடப்பாடி மலிவு அரசியலா?காங்கிரஸ் எம்.எல்.ஏ.கடும்குற்றச்சாட்டு!!
- உறியடி செய்திகள்

- Nov 16, 2022
- 1 min read

மழை பாதிப்பு : விவசாயிகள் மீது உண்மையான அக்கரைரயில்லாமல், அரசியலில் தன் இருப்பை காட்டுகிறா எடப்பாடி பழனிச்சாமி ! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை கண்டனம்.!!
-
அதிமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சா? எதிர்கட்சியாக இருந்தாலும் நியாயமாக பேசவேண்டும் அல்லவா? தன் இருப்பை காட்டு அரசியல் செய்ய வேண்டுமென்ற விளம்பர நோக்கத்திற்காக இப்படியெல்லாம் எடப்பாடி பேசுவதா? என மழை வெள்ள பாதிப்பு குறித்த எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்திக்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.......

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
கடந்த 2020 டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள், கடலூரில் 15 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கடலூரில் நெல் மட்டுமல்லாது வாழை, பொங்கல் கரும்பு, நிலக்கடலை, பருத்தி, காய்க்கறிப்பயிர்கள் போன்றவை ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமடைந்தன.
இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி தஞ்சாவூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைபயிர்கள் சேதமடைந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டங்களை அப்போதைய முதல்வாரன திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், வேளாண்மை துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்........

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய கடந்த 2020 டிச.28ந் தேதி டிசம்பர் அன்று தமிழகம் வந்த மத்தியக் குழுவின் அறிவுரைப்படி, புள்ளி விவரங்கள் இறுதி செய்யப்பட்டு, பாதிப்படைந்த விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்களும் சரிபார்க்கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று கூறினார் எடப்பாடி.......
ஆனால்இன்று ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு அன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக அரசு கொடுத்த இழப்பீடு எவ்வளவு? குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கொடுத்தார்களா?
அதிமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, திமுக ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சா? எதிர்கட்சியாக இருந்தாலும் எடப்பாடி நியாயமாக பேசவேண்டும் அல்லவா? தன் இருப்பை காட்டி அரசியல்செய்ய வேண்டுமென்ற மலிவு விளம்பர நோக்கத்திற்காக தன் சுயநலத்திற்காகஇப்படியெல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பேசுவதா......... இதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள. பகுதிகளுக்கு நேரடியாக சென்ற தமிழக முதல்வர் .மு.க.ஸ்டாலின் , பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் தகுந்த இழப்பீட்டை இந்த தமிழக அரசு வழங்கும் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவான அரசு அம்மா அரசுதான் என்று மார்தட்டி கொண்டு,சொல்லிக் கொள்ளும் அதிமுக. மிகவும் நெருக்கமாக தங்கள் கூட்டணியில் உள்ள ஒன்றிய அரசிடம் பேசி பாதிப்புக்குளாகி வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ள தமிழக விவசாயிகளுக்கு தேவையான நிவாரண நிதியை உடனடியாக கேட்டுப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,.....
இவ்வாறாக அதில் கூறியுள்ளார்.




Comments