பருவமழை தடுப்புப் பணிகள் தீவிரம்! சுழற்றும் முதல்வர்!! சுழலும் அமைச்சர்கள்-அரசு நிர்வாகங்கள்!!!
- உறியடி செய்திகள்

- Nov 3, 2022
- 2 min read

வடகிழக்கு பருவமழை, முன்னெச்சரிக்கை, தடுப்புப் பணிகள், மீட்புப் பணிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளின் தீவிர நடவடிக்கைகள் தீவிரம், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனத்துடன், நேரடி பார்வையில்....பம்மரமாய் சூழல் பணிகளில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள்..... பருவமழை பணிகள் சிறப்பு பொதுமக்கள் முதல்வருக்கு பாராட்டு, வாழ்த்துக்கள்........
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வட் சென்னையில் தேங்கியுள்ள பணியை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது பாதிப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை வீடியோ கால் மூலம் கேட்டறிந்தார்.தி.மு.கழக பொதுச்செயலாளர், தமிழக நீர்வழித்துறை அமைச்சர்கள், துரை- முருகன் எ.வ, வேலு உடனிருந்தார்கள்........

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி, சென்னை மட்டுமின்றி தமிழகத்தையே சீரழித்து விட்டதாக சாடினார். அவை அனைத்தும் விரைவில் சீர் செய்யப்படும் எனவும், உணவு, குடிநீர், மருத்துவம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குறித்து அமைச்சர்களுக்கும், சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொள்ள உத்தவிட்டுள்ளதாகவும் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் குறித்து, அரசுகட்டுபாட்டு மையம், மாநகர கட்டுப்பாட்டு மையங்களை பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு பணிகளை உடனுக்குடன், துரிதமாக தடங்கள் யின்றி மேற்கொண்டு மக்களுக்கு உதவிட வேண்டும். அது உரிய காலத்தில், நேரத்தில் மக்களை சென்றடைவு துடன், அடிப்படை தேவைகள்" வசதிகளும், ஏற்படுப்படுத்திதரவும், உத்தரவிடப்பட்டு, இதற்காக தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றார்கள். என்றும்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.........

தமிழ்நாட்டின் முக்கிய அணைகள், நீர்தேக்கங்கள், தற்ப்போதைய கொள்ளலவு, குறித்து கேட்டறிந்த முதல்வர்,பருவமழை கனமழை, நேரங்களில் பொதுமக்கள், கரையோர மக்களின் பாதுகாப்பு அடிப்படை, அத்தியாவச தேவைகளுடன் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தடையின்றி கொடுத்திடவும் உத்தரவிட்டுள்ளார்....

முன்னதாக முதல்வரின் உத்தரவின்படி, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகம். குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர்கள், இந்துசமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதார. துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயர் பிரியா, ஆணையர் சுகதிப் சிங் பேடி. மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற - மாமன்ற உறுப்பினர்கள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அலுவலகத்தில், பருவமழை குறித்த நேரிடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டதுடன், கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை முதல்வரின் உத்தரவுப்படி அமைச்சர் கே.என்.நேரு, தலைமையில் நேரடி கண்காணிப்பில் பணிகளை முன்னெடுத்துவருவதுடன்......

,சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளநீர் தேங்கும் பகுதிகளில் 24X7 என்கிற வகையில் இரவுபகல் பாரதுகள ஆய்வுகளை கொட்டும் மழையில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, மழைநீர், வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளை அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது செய்தும் வரகின்றனர்........

விருதுநகர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக வருவாய் - பேரிடைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தின், சென்னை, சேப்பாக்கம், வருவாய் -. பேரிடர் துறைகண்காணிப்பு மையத்திலே முகாமிட்டு காணெலி மூலம் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டு, முகாம்கள், ஒன்றிய, தமிழக பேரிடர் மீட்புக்குழுவினரை தயார்நிலையில் உள்ளதாகவும், முதல்வரின் நேரடி கட்டுபாட்டில் வைத்து பருவமழையை பேரிடர்- முன்னெச்சரிக்கைப் பணிகளை கண்காணித்து வருவதுடன், இந்த கால சூழலுக்கேற்ப பருவமழையில் இதுவரை நடந்த பணிகள் பற்றி ஆய்வு செய்து, இன்னமும், முழுமையாக தீவிரமாக தாமதங்களின்றி, அனைவரும்பணியாற்றவும்,முதல்வர் மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் வழங்கி பணிகளைமேற்கொள்ள அவ்வப்போது உத்தரவிட்டும் வருகிறார்.......

எனவே பருவமழையை எதிர்கொள்ள வருவாய் - துறை தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் களஆய்வு செய்து, நிவாரண உதவிகளை ஈரோடு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, வழங்கினார்,மே லும் பருவமழை தொடர்பான அனைத்து முன்னெ ச்சரிக்கை தடுப்பு பணிகளை துரதபடுத்தவும்,அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளார்......


தமிழ்நாடு மின்கட்டுபாட்டு மையத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைவுப்படுத்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்தட்டுபாடு, குறைகளின்றி, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.......
சென்னை உள்ளிட்ட, தமிழுகத்தில் பிற பகுதிகளிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை, தொடர்காணெலி மூலம் தொலைபேசிகள் மூலமும் , சரியாகவும் முறையாகவும், உரிய நேரத்திலும் செய்ய திடவும். இதில் அமைச்சர்களும் - உயர்அதிகாரிகளும் 24 மணி நேர நேரடி களப்பணியில் ஈடுப்பட்டு பணியாற்ற அனைத்து அரசு துறையினருக்கும் உத்தரவிட்டு, வழிநடத்தும், தமிழுகமுதல்வர், தி.மு.கழக தலைவர், மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் - வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்........
சபாஸ் தொடரட்டும் இதுபோன்று பிற பணிகளும்......
மணவை, எம்.எஸ்.ராஜா.




Comments