கர்நாடக பாஜ,வுக்கு மேலும் அதிர்ச்சியா? தலைதூக்கிய40% கமிஷன்! ஒப்பந்தக்காரர்கள் சங்கம் குற்றசாட்டு!
- உறியடி செய்திகள்

- May 9, 2023
- 1 min read

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் 40% கமிஷன் பெறப்பட்டதாகவும், மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவே ண்டியுள்ளதாகவும் தேர்தல் நெருங்கும், வேளையில், ஒப்பந்தக்காரர்கள் அறிக்கை ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது
இது பற்றிப, விபரம் வறுமாறு!
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்கு பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன. கர்நாடகத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும்.
இவ்வாறாக கூறப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பெருகிவிட்ட ஊழல் அனைவரது மனசாட்சியையும் காயப்படுத்தி இருக்கிறது. கர்நாடக பாஜக அரசை 40% கமிஷன் அரசு என்று காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலை யில்,பிரச்சாரங்களிலும் பாஜகவுக்கு எதிரான முக்கிய விமர்சனங்களாக 40% கமிஷன் குற்றச்சாட்டு இடம்பெற்றது. நாளை கர்நாடக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒப்பந்ததாரர்கள் 40% கமிஷனை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பாஜக, வட்டாரம் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
என்று அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்புடன் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!




Comments