எம்.பி.வெங்கடேன் தமிழ் எழுத்து விளக்கபேச்சால் சர்ச்சையில் சிக்கினாரா பா.ஜ. அண்ணாமலை!!
- உறியடி செய்திகள்

- Nov 6, 2022
- 2 min read

பா.ஜ. மாநில தலைவராக முன்னால் கர்நாடக மாநில காவல்துறை அதிகாரி.அண்ணாமலை பொருப்பேற்றபின்னர், சனாதான கருத்துக்கள் பரப்பும், சங்பரிவார அமைப்புகளின் செயல்திட்டங்கள் அதிகரிக்கவே செய்தது...
இதன் வேகம் ஒரு கட்டத்தில் (சமீபகாலமாக) தந்தைபெரியார்,திருவள்ளுவர், வீரமாமுனிவர், பற்றிய முரணான தகவல்களை பரப்புவதிலும் தீவிரம் காட்டப்பட்டது.....
இதன் நீட்சியாக பிரதமர் மோடியிலிருந்து, கவர்னராக வந்த ஆர்.என்.ரவி வரை முரணானகருத்துக்களை தமிழ்நாட்டில் வெளிப்படுத்தி வந்ததாகவும் குற்றசாட்டுகளும் இல்லாமலில்லை...
இதன் அடுத்தகட்டத்தை வேகப்படுத்தி சனாதான கருத்துக்களை அண்ணாமலை, தமிழக அரசியல் வரலாறு தொல்சியதமிழ்மொழி பற்றிய புரிதலின்றி, வாய்க்கு வந்ததை பேசிவருவதாகவும் எதிர்வினையும் மிக பெரிய அளவில் வெடிக்கவும் செய்தது. இதன் நீட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் பிரதிபலிக்கவே செய்கிறது.....

இதில் அண்ணாமலையும், அவரது சாகக்களும் தந்தைபெரியார்' வீரமாமுனிவர், திருவள்ளுவரை பற்றி கூறிய கருத்துக்களின் எதிர்வினை சர்ச்சைகள் ஆதாரங்களுடன் அண்ணாமலை வகையறா மீது கடும் குற்றசாட்டுகள் நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணமாக அதிகரித்து கொண்டேதான் வருகிறது....
இந்நிலையில்தான், சங்பரிவார அமைப்புகளின் தலைமையகமாக கூறப்படும் ஆர் எஸ்.எஸ்.அமைப்பு தமிழ்நாட்டில் 50 க்கும் மேற்பட்ட யிடங்களில் தங்களின் பேரணியை நடத்த நீதிமன்றத்தில்அனுமதி கோரியது. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இதுதொடர்பான வழக்கும் உயர்நீதிமன்ற விசாரணைக்கும் வந்து தமிழ்நாடு காவல்துறையை வழக்கு குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டது....
இதனை தொடர்ந்து
ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி .....

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தலைமை அலுவலகம் எங்கே இருக்கிறது...
கலந்து கொள்வோருக்கு உறுப்பினர் எண் கொண்ட அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதா?
பதிவு எண்...அங்கீகார அனுமதி எங்கே..
அதன் தலைவர்.. செயலாளர்.. பொருளாளர் யார்...அதாவது நிர்வாகிகள் யார் யார்..
பேரணிக்கு பொறுப்பு ஏற்கப்போகிறவர்கள் யார்...
ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் யாரிடம் நிவாரணம் கேட்பது?
எந்த விதமான தகவல்களும் இல்லாத மூடு மந்திரம் போல இருந்தால் எப்படி அனுமதி கொடுக்க முடியும்??
என்கிற கேள்விகள் எழுப்பபட்டன.....
இதனால்தான் அதிர்ச்சிக்குள்ளான ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர், தங்கள் அனுமதி கோரியபேரணியை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தீவிர ஆலோசனையிலுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைராலாகி வருகிறது...

இந்த பரப்பரப்பு அடங்கும் முன் திருச்சியில், சமீபத்தில்நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை அன்கோவிற்கு விளக்கம்கொடுத்து பேகம் போது.....
அண்ணாமலையின் பெயரை கூறியே, தந்தைபெரியாரும்-வீரமாமுனிவரும் தமிழ் மொழியிலும், எழுத்துக்களிலும் ஏற்படுத்திய எளிமையான சீர் திருத்த புரட்சிகளை பட்டியலிட்டு பேசியது சமூக வலைதளங்களில் இப்போது அதிக டென்டிங் ஆகி வருகிறது.....
சும்மா கிடந்த சங்கை, ஊதி கெட்ட கதையாக, ......
எம்.பி.சு.வெங்கடேசன் கூறிய தமிழ் மொழி உச்சரிப்பு |எழுத்துக்களின் விளக்கமும்
மேலும் இதில் கூடுதலான கவனத்தைல் ஈர்த்துள்ளது. ......
எம்.பி.வெங்கடேசன் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் தனது பெயரை தமிழில் எழுதினால், தந்தைபெரியார். வீரமாமுனிவர்,கருத்துக்களை ஏற்றுக் கொண்டவராகவும், ஆங்கிலத்தில் எழுதினால் பிரிட்டீஸாரின் (ஆங்கிலேயர்கள்). கருத்துக்களை ஏற்றுக் கொண்டதாகவும், அல்லது தான் ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியாற்றிய கன்னடத்தில் எழுதினால், தமிழ்நாட்டு மக்களுக்கெதிரான கன்னடர்களின் நிலைப்பாட்டை ஆதிரிப்பதாகவும், அல்லதுஹந்தி மொழியை பயன்படுத்தினால், சங்பரிவார பின்புலம் கொண்டவர்களாக கூறும், மோடி, அமித்ஷா.ஆர்.என்.ரவி., ஆகியோர் கட்டாய ஹிந்தி மொழி திணிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஊர்ஜிதபடுத்தபடும் என்கிற சூழலே உருவாகும் என்கின்றார்கள் அரசியல் பார்வையாளர்களும்
விபரமறிந்தவர்களும் .....
தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட நகர்வு....
அட யோசிக்கட்டும்,விடுங்கப்பா!
தொகுப்பு,
உறியடிசெய்திக்குழுவினர்




Comments