நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா! புதிய தலைமைச்செயலாளரானார்! தமிழக அரசு அறிவித்தது!!
- உறியடி செய்திகள்

- Jun 29, 2023
- 2 min read


மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா....
தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளரானார் சிவ்தாஸ் மீனா - இன்று அறிவிப்பு வெளியானது!
நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலாளராக துறையின் அமைச்சர் .
கே.என்.நேருவுடன் சிவ்தாஸ்மீனா பணியாற்றி, அரசின் துறைசார்ந்த திட்டங்களை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப துறையின்.அமைச்சரின் வேகத்த்திற்கு ஏற்பத்துறையின் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்தவர் சிவ்தாஸ்மீனா என்பதும்!
பொதுவாக அமைச்சர் கே.என்.நேரு ஓய்வைப் பற்றிய சிந்தனைகள் இல்லாமல் தமிழகம் முழுவதும் சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், சிவதாஸ் மீனாவும் உடன் சென்றுப் பணிகளை முன்னெடுத்தது. வந்தது.தமிழக தலைமைச்செயலாளராக மென்மேலும் சிறப்பாக தனது பணிகளை தொடர பெரிதும் அனுபவ ரீதியாக உதவியாக அமையும் என்கின்றனர் அரசு துறை வட்டாரத்தில்....!

தமிழகத்தின் தலைமைச் செயலராகப் பொறுப்பு வகிக்கும் வெ.இறையன்பு நாளை (ஜூன் 30) ஓய்வு பெறுவதையடுத்து, 49-வது தலைமைச் செயலராக, தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது!.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே மாநில தலைமைச் செயலராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை ஒய்வு பெறுகிறார்.
அவர் ஓய்வுபெறும் சூழலில், புதிய தலைமைச் செயலர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.!

தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் தலைமைச் செயலராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது!
இந்நிலையில், புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனாவை நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.!
அதன்படி புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ்மீனா நியமித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது!

புதிய தலைமை செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
பொறியியல் பட்டதாரியான இவர், ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஐப்பான் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர். 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த சிவதாஸ் மீனா, முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக தனதுபணியை தொடங்கினார்.!

பின்னர், கோவில்பட்டி உதவித் கலெக்டராகவும், வேலூர் கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.!
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய இவர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்து வந்தார். இப்படி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.!




Comments