நாமக்கல்: எஸ்.ஐ.க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை! பரபரப்புதகவல்கள்!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 1 min read

நாமக்கல் நகர காவல் நிலையத்தில் எஸ்.ஐ க்கு சொந்தமான 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை.!
நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக தற்போது பணியாற்றி வருபவர் பூபதி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ராசிபுரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பூபதி பணியாற்றி வந்த போது நிலப்பிரச்சினை தொடர்பாக வந்த புகாரில் பணம் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டதாகவும்,
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தற்போது புகார் ஒன்று வந்துள்ளது!.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று உதவி ஆய்வாளர் பூபதிக்கு சொந்தமான இடங்களில் நாமக்கல் மற்றும் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.!
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள திருநகரில் நகரில் பூபதி குடியிருக்கும் வீடு, மல்லசமுத்திரத்தில் உள்ள அவரது பூர்வீக வீடு , அவரது மாமனார் வீடு, மற்றும் சேலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஆகிய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நாமக்கல் டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் போலீசார் இன்று காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.!
இவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது நிலப் பிரச்சினை தொடர்பாக பணம் பெற்றுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுகள் கூறப்பட்ட நிலையில். கடந்த 2020 ஆம் ஆண்டு நாமக்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கஞ்சா வியாபாரிகளிடம் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. இவர் சொகுசு கார் மற்றும் சொத்துக்கள் வாங்கிகுவித்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் கூறப்பட்டும் வந்தா க கூறப்படுகின்றது!.




Comments