செங்கல்பட்டு அருகே!அரசு மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Oct 17, 2023
- 1 min read

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா
செங்கல்பட்டு, அருகே அரசு மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி திடீர் ஆய்வு!
தமிழ்நாட்டில் சிறுநகர பகுதிகளிலும் வலுவான கட்டமைப்பை கொண்ட மருத்துவ வசதி, அனைவருக்கும் சென்றிடும்வகையில் சேவைமனப்பாண்மையுடன் பணியாற்றவும் வலியுறுத்தல்.!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழக விளையாட்டு, இளைஞர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்!

அப்போது புறநோயாளிகள் பதிவு செய்யுமிடம் - மருந்து - மாத்திரைகள் வழங்குமிடம் - சிகிச்சைக்கான வார்டுகள் - கழிப்பறைகளுக்கு சென்று, அவற்றின் நிலையையும் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள், மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் சிகிக்சைக்காக வந்திருந்த புறநோயாளிடமும், சிகிச்சை பெறுவது குறித்தும், தேவையான வசதிகள், கூடுதல் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் - அளிக்கபடும் சிகிச்சையின் தன்மைகள் குறித்தும் கேட்டறிந்தார்.!

தொடர்ந்து மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையின் மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களிடம்,
,சிறு நகரங்களிலும் வலுவான சுகாதார கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்திடும் வகையில், சேவை மனப்பாண்மையுடன், கவனமுடனும், மருத்துவ வசதி அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக கிடைக்கும் வகையில் பணிற்றிட வேண்டும், என்றும் வலியுறுத்தி கூறினார்.




Comments