புதுக்கோட்டை அருகே,131 ஆண்டு ஜல்லிக்கட்டு! அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்!!
- உறியடி செய்திகள்

- May 7, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா...
புதுக்கோட்டை அருகே 131-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர்
மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்....
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின் தலையிலான, கழக அரசு பொருப்பேற்று, நேற்றோடு இரண்டாண்டுகள் நிறைவு செய்த நிலையில், தமிழக அரசு அனைத்துத்துறை சார்ந்த மக்கள் நல திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி மக்கள் பணிகளை செய்திடும்வகை யில், முன்மாதிரியாக, இதுவரையில்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதனை பிற மாநிலங்களும், அரசியல் கட்சித்தலைவர்களும், அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டியும் வருகின்றனர்.
அதன் நீட்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசால்,
பாரம்பரிய விளையாட்டுகள், முன்னோர்கள் பாரம்பரிய கலாச்சாரம் சார்ந்த கலைகள், விளையாட்டு. போன்றவைகள், மீட்டெடுக்கப்பட்டு, இக்கால சந்ததியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தமிழர்களின் பண்பாடு, கலைகள், விளையாட்டுக்களை அறிந்து கொள்ளவும், அடுத்த தலைமுறையினருக்கும் பழைய மாறா புதுமையுடன் அரசுப் பணியை தனிக்கவைத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மீட்டெடுக்கப்பட்டு, உச்சநீதிமன்ற வழிகாட்டல்களோடும், அரசு முறைகளின் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம்பட்டி கிராமத்தில் உள்ள ஓட்டக்குளத்தில் 131ம் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது....
இவ்விழாவினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிக்கட்டு பரிசு போட்டியினை தொடங்கி வைத்தார்....
விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நகர்மன்ற தலைவர் செந்தில் எம்.எம். பாலு, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் வட்ட செயலாளர் முத்து கருப்பன் விஜயக்குமார். மாவட்ட கோட்டாட்சியர் முருகேசன் வட்டட்சியர் ஜெயலெட்சுமி, எஸ்டிக்குமார் புஷ்பராஜ், கானகராஜ், மற்றுஅரசு அதிகாரிகள் பொதுமக்கள் விழா கமிட்டியார்கள் உள்ளி ஏராளமானோர் கலந்துகொண்டார்....
ஜல்லிக்கட்டில் 650 காளைகள் . 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறையினர் காவல்துறை தீயணைப்பு துறை அலுவலர்கள், முதலுதவி, மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்....




Comments