புதிய தொழில் முதலீடு! முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு! தி.மு.க.வினர் தீர்மானம் நிறைவேற்றம்!!
- உறியடி செய்திகள்

- May 29, 2023
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
தொழில் முதலீடுகளை ஈர்த்து வரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு துவக்க நாளான ஜூன் மூன்றாம் தேதியன்று குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட மாநகர ஒன்றிய நகரபேரூர் பகுதிகளிலும் கிளை கழகங்களில் தலைவர் கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அமைத்தலைவர் எப். எம் ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் மாநகர மேயருமான மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்
உலகம் முழுவதும் வாழும் தமிழர் இதயங்களையும் கோடிக்கணக்கான தி.மு.கழகத்தினரின் உயிர் மூச்சிலும் இரண்டறகலந்து இருக்கிற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி வட்டக் கழகங்கள் ஊராட்சி கழங்கள் மற்றும் அணிகளின் சார்பாக ஏழை எளிய மக்கள் பயன் பெறுகையில் நலத்திட்ட உதவிகள் இலவச மருத்துவ முகாம்கள் ரத்த தானங்கள் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் உணவு வழங்கல் பள்ளி குழந்தைகளுக்கு ஓட்டுப் புத்தகம் எழுது பொருட்கள் வழங்கியும் மேலும் தலைவர் கலைஞரின் கொள்கைகள் இலட்சிய சிறப்புகளை விளக்கிட வகையில் தெருமுனை கூட்டம் பொதுக்கூட்டம் பட்டிமன்ற கலை நிகழ்ச்சி கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி இளைஞரணி சார்பாக பொதுக்கூட்டங்கள் நடத்தின வேண்டுமெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு.
தொடக்க விழா பொதுக்கூட்டத்துக்கு குமரி மாவட்ட கழகத்தின் சார்பாக பெரும் திரளாக செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை பெறுகின்ற வகையில் சிங்கப்பூர் ஜப்பான் ஆகிய மேலை நாடுகளுக்கு சென்று வெற்றி வாகைச் சூடி தமிழகம் வருபரை இக்கூட்டம் மனதார வாழ்த்தி பாராட்டுகிறது .
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் குளச்சல் தொகுதி பொறுப்பாளர் அருண் மாவட்ட துணை செயலாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், சோமு, மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்எஸ் பார்த்தசாரதி, பொதுகுழு உறுப்பினர்கள் ஞானபாய் ரகுமான் ஜீவா மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன் பாபு,பிஎஸ்பி சந்திரா, சற்குரு கண்ணன் பிராங்கிளின், செல்வம், லிவிங்ஸ்டன், சுரேந்திரகுமார் , ராஜேஷ்குமார் பேரூர் செயலாளர்கள் ஆலிவர் தாஸ் சுதேசுந்தர் இளங்கோ மகேஷ் சுப்பிரமணியன் வைகுண்ட பெருமாள், முத்து சுதாகர் அய்யப்பன் பிரதாப்சிங் மாநகர பகுதி பொறுப்பளர்கள் ஜவகர் ஷேக்மீரான் ஜீவா குளச்சல் நகர செயலாளர் நாகூர்மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Comments