டெல்லி: செப்,20.21. ஆசிய பசிபிக் மாநாட்டை புறக்கணிப்போம்! வழக்கறிஞர் ஹென்றி டிபேன் கண்டன அறிக்கை!
- உறியடி செய்திகள்

- Sep 16, 2023
- 2 min read

புது டெல்லியில் செப்.20.21. தேதிகளில் நடைபெறும் ஆசிய பசிபிக் மாநாட்டை புறக்கணிப்பு செய்திடவேண்டும், என்று வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.!
இந்திய தேசிய மனிதவுரிமை ஆணையம் ஆசிய-பசிபிக் மன்றத்தின் (APF) 28ஆம் ஈராண்டு மாநாட்டை புது தில்லியில் 2023 செப்டம்பர் 20, 21 நாட்களில் முன்னின்று நடத்துவதை கண்டிக்கிறோம் (காண்க: இணைக்கப்பட்டுள்ள கூகிள் படிவம்)
தேசிய, மாநில மனிதவுரிமை நிறுவனங்களோடு இணைந்து உழைக்கும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தனியாட்களின் அனைத்திந்திய வலைப்பின்னல் (AiNNI) அமைப்புகளின் சார்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது!
அன்பிற்குரிய நண்பர்களே, சகாக்களே, கூட்டாளர்களே, தோழர்களே!
உங்களுக்கெல்லாம் தெரிந்த செய்திதான்: நீதியர் அருண் மிஸ்ராவின் தலைமையில் அறவே எவ்வித நம்பகத் தன்மைக்கும் தகுதியற்றதாகி விட்ட இந்திய தேசிய மனிதவுரிமை ஆணையம் (NHRC) 2023 மார்ச் மாதத்தில் தேசிய மனிதவுரிமை நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பின் (GANHRI) ‘A’ தரச் சான்று பெறத் தவறி விட்டது. இப்படிப்பட்ட அவலமான செயற்பாட்டின் விளைவாகத்
தேசிய, மாநில மனிதவுரிமை நிறுவனங்களோடு இணைந்து உழைக்கும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தனியாட்களின் அனைத்திந்திய வலைப்பின்னல் (AiNNI) எடுத்த முன்முயற்சியால், நீதியர் அருண் மிஸ்ரா 2023 செப்டம்பர் 5ஆம் நாள் சிவில் சமூகத்தோடு “கலந்துரையாடும் அமர்வு” கூட்ட மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் படுதோல்வியுற்றது. சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஏழே ஏழு பேர்தான் அதில் கலந்து கொண்டனர்.!
தேசிய, மாநில மனிதவுரிமை நிறுவனங்களோடு இணைந்து உழைக்கும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தனியாட்களின் அனைத்திந்திய வலைப்பின்னல் (AiNNI) விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பன்னாட்டுப் பொதுமன்னிப்பு அவை, சிவிக்கஸ் (CIVICUS), முனைமுகத்துக் காப்பாளர்கள் (Front Line Defenders), பன்னாட்டு மனிதவுரிமைக் கூட்டமைப்பு (FIDH), பன்னாட்டு மனிதவுரிமைச் சேவை, சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT), மனிதவுரிமைகளுக்கான தெற்காசியர்கள் (SAHR) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆசிய பசிபிக் மன்றத்துக்குத் திறந்த மடல்கள் விடுத்துள்ளன.!

மனிதவுரிமை சிவில் சமூக அமைப்புகள் ஆசிய பசிபிக் மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு செய்த பிறகு தேசிய மனிதவுரிமை ஆணையத்துடன் ஒருநாளும் இணைந்துழைக்காத ஆட்களையெல்லாம் அம்மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொள்ளச் செய்ய தேசிய மனிதவுரிமை ஆணையம் முயன்று வருவதை அறிவோம். இந்தியாவைச் சேர்ந்த AiNNI உறுப்பினர்கள் நீதியர் அருண் மிஸ்ராவின் அரசியல் கூத்தில் கலந்து கொள்ளாமல் விலகி நிற்கவும் தீர்மானித்துள்ளனர். ‘A’ தரச் சான்றினை 2011, 2016, 2017, 2023 பரிந்துரைகளைப் பின்பற்றுவதன் மூலம் பெற்றுக் கொள்ளாமல் கொல்லைப்புற வழியில் அடையவே அருண் மிஸ்ரா முயல்கிறார்!
.
இந்தப் பின்னணியில்தான், தேசிய மனிதவுரிமை நிறுவனங்களின் ஆசிய பசிபிக் நிறுவனத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எழுதப்பட்ட இந்தத் திறந்த மடல் உங்கள் ஆதரவு வேண்டி உங்களுக்கு அனுப்பப்படுகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்:!

I. நீங்கள் இதில் ஒப்பமிடுவது தனியாளாகவா, அமைப்பு/ வலைப்பின்னல்/ மேடை/ கூட்டமைப்பு போன்ற ஒன்றாகவா என்பது பற்றிய விவரங்கள் தருக!
.
II. எனது வேண்டுகோள் மடலை இந்த கூகிள் படிவத்துடன் முறையே அவரவர் குழுக்களிலும் விரிவாகப் பகிரத் தயங்க வேண்டாம். தேசிய மனிதவுரிமை ஆணையத்தையும் மனிதவுரிமைக் களத்தில் அதன் செயல்பாட்டையும் இந்திய சிவில் சமூகம் எதிர்க்கிறது, கண்டிக்கிறது என்பதைக் காட்ட நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கில் திரட்ட உதவுங்கள்.
காலம்தான் மிகவும் முக்கியம். இந்தப் படிவத்தை உடனே நிரப்புங்கள், 2023 செப்டம்பர் 17, பகல் 12 காலக்கெடுவெனக் கொண்டு அதற்குள் நிரப்புங்கள். அந்த நேரத்துக்குள் மின்னஞ்சல், புலனம், சிக்னல் வழியாக உங்கள் குழுக்கள் அனைத்திலும் இதனைச் சுற்றுக்கு விட்டு, தொடர் நடவடிக்கை எடுங்கள். இந்தியாவில் நீதியர் அருண் மிஸ்ராவுக்கு சிவில் சமுகம் எதிர்ப்புக் காட்டுவது அனைத்துலகச் சமுதாயம் பார்க்கப் பதிவாக வேண்டும்.!
நாம் இதனை உறுதியாக செப்டம்பர் 18 காலை ஊடகங்களுக்கும், தேசிய மனிதவுரிமை நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பின் (GANHRI) அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும், ஆசிய பசிபிக் மன்ற (APF) உறுப்பினர்களுக்கும், மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்துக்கும், ஐக்கிய நாடுகள் சிறப்பு நடைமுறையாளர்களுக்கும் வெளியிடுவோம். தேசிய மனிதவுரிமை ஆணையம் (NHRC) மனிதவுரிமைக் காப்பாளர்களின் முதுகில் குத்தியதை எதிர்த்து இந்தியச் சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது.
நாம் ஒன்றுபட்டு நிற்போம்.!
இவ்வாறாக வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.




Comments