ஈரோடு, அருகே தூய்மைப் பணிகளுக்கு புதிய வாகனங்கள்! அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Sep 22, 2023
- 1 min read
Updated: Sep 25, 2023

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா....
ஈரோடு அருகே தூய்மைப் பணிகளுக்கு புதிய வாகனங்கள்! அமைச்சர் முத்துச்சாமி வழங்கி, கொடியசைத்து மக்கள் பணிகளை தொடங்கிவைத்தார்!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிபகுதிகளின், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தி.மு.கழகத்தலைவர்,
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தல், வழிகாட்டல்களின்படி, எதிர்வரும் பருவமழையினை கருத்தில் கொண்டும்,
திடக்கழிவு குப்பைகளை, சேகரித்து குப்பை கிடங்குகளுக்கு எடுத்தும் பணிக்காக புதிய வாகனங்கள், மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.!

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து புதிய வாகனங்களை சம்மந்தபட்ட உள்ளாச்சி அமைப்புகளுக்கு வழங்கி, மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் - மக்கள் பிரதிநிதிகளிடம்,பருவமழை காலம் தொடங்கவுள்ளதாலும், தொற்றுநோய் பரவலை தடுக்கும் வகையிலும் துரிதமாக தூய்மைகளில் முனைப்புடன்பணியாற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.!
நிகழ்வினில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. கே. சரஸ்வதி , ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் , மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய தி.மு.கழக செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், மற்றும் தி.மு.கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக , மகளிர் அணி, சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்பட பலர்கலந்து கொண்டனர்.




Comments