சாதி - மதங்களுக்கு இடமில்லை! அரவணைக்கும் முதல்வராக செயல்படுகின்றார்! அமைச்சர் ராஜகண்பன் பேச்சு!
- உறியடி செய்திகள்

- May 10, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா.....
சாதி பேதமின்றி மக்களை ஒருங்கிணைத்து செல்லும் தலைவராகவும், தலைசிறந்த முதன்மை முதல்வராகவும் இருந்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் புகழாரம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி என அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலன், காதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புகழாரம் சூட்டி பேசியதாவது ....

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதிஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவுற்றது. ஆட்சியின் அரும் பெரும் சாதனைகளை எளிதாக எல்லோரும் அறிந்திடும் வகையில் " ஈடில்லா ஆட்சி.," " ஈராண்டே சாட்சி " என்ற உன்னத நிலையை உணரும் வகையில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கியதன் பயனாக இன்று பொதுமக்களே போற்றக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு இருந்து வருகிறது.
மக்களின் வளர்ச்சி... நாட்டின் வளர்ச்சி..என்ற குறிக்கோளுடன் மக்களோடு மக்களாய் நான் இருந்தேன். மக்களோடு மக்களாய் நான் இணைந்தேன்.
மக்களுக்காக பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற உயிர் மூச்சாக மக்களோடு வாழ்ந்து வரும் நம் முதலமைச்சர் ஸ்டாலின் சாதி பேதமின்றி சமத்துவ தலைவராகவும், தலைசிறந்த முதல்வராகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை அறிந்து அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று கூறியதுடன், செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டு கூறி, புகழாரம் சூட்டி பேசினார்......

தொடர்ந்து, விழாவில்அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் 981 பயனாளிகளுக்கு ரூ 4.17 கோடி மதிப்பிட்டீல் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
அரசு அலுவலர்கள், பயனாளிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




Comments