வேளாண் மண்டலத்தில் எந்தஆலைக்கும்அனுமதியில்லை! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி !!
- உறியடி செய்திகள்

- Apr 4, 2023
- 1 min read



தடைசெய்யப்பட்ட வேளாண் மண்டல பகுதியில், எந்த ஆலைகளுக்கும் அனுமதி இல்லை! வேளாண் மண்டலங்களையும், வேளாண்மை - உழவர் நலன்களை காப்பதில் நம் முதல்வர் தளபதியார் தாயுள்ளத்துடன் திட்டங்களையும் தந்து பாதுகாத்து வருகின்றார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறினார்..
நீண்ட சமவெளிப் பாசனபரப்பான டெல்டா, பொன் விளையும் பசுமை பூமியாகத் திகழ்கிறது.
ஒன்றிய அரசு, , தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், நிலக்கரி எடுக்கப்படும் என அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின .....
காவிரி டெல்டா பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் நிலையில், ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. நிலக்கரி எடுப்பது ஹைட்ரோகார்பன் திட்டத்தைவிட மோசமானது. ஒன்றிய பா.ஜ.க அரசு காவிரி சமவெளி மாவட்டங்களைப் பாலைவனமாக்க முயலுவதாகவும் குற்றச்சாட்டுக்களும் பலதரப்புகளில் எழும்பியது........
இந்நிலையில், தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், தருமபுரி மண்டல தி.மு.கழக பொருப்பாளர், கடலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு உழவர் நலன் - வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது....


தமிழ்நாட்டில், தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொருப்பேற்ற காலம் முதல் விவசாயிகள், வேளாண் உற்பத்தி வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கும். தமிழகத்தில் முழுமையான பசுமை புரட்சியை ஏற்படுத்திட வேண்டும் என்பதில் நம் முதல்அமைச்சர் தனி கவனம் கொண்டு, முதன்முதலாக இத்துறைக்கு தனிபட்ஜெட்டும் வழங்கிவருகின்றார்.
கழகத் தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் தளபதியாரின் தலைமையில் கடந்த 12.5.20 22.அன்று தமிழக அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட சிறப்புவாய்ந்த, கூட்டத்தில், வேளாண் சார்ந்த டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யபட்ட வேளாண் மண்டலமாக முடிவு எடுக்கப்பட்டு, அதற்கென்று சிறப்புதனிக் குழுவை முதல்வர் ஏற்படுத்திதந்து செயல்பட்டு வருகின்றது......

அதன்படி தடைசெய்யப்பட்ட டெல்டாவேளாண் மண்டலப் பகுதிகளில் மீத்தேன், நிலக்கரி படுகைகள், எண்ணெய் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட 8 வகையான தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், தொழில்கள் தொடங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு,தடைசெய்யப்பட்டது........

மேலும் கடந்த ஆண்டு ஹைட்ரோகார்பன் திட்டமும் தடைசெய்யப்பட்டது. விவசாயிகளையும் வேளாண் உற்பத்தியையும், வேளாண் மண்டலங்களை பாதுகாப்பதிலும் தாயுள்ளத்தோடும் அக்கரையோடும் நமது முதல்வர் செயல்பட்டு வருகின்றார்.

மேலும் தற்போது எழுந்துள்ள இப்பிரச்சனை குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கையும் நம் முதல்வர்எடுக்கச் செய்வார். எனவே விவசாய பெருமக்கள். வேளாண். உழவர் பெருமக்கள் வீண் வதந்திகளை நம்பவேண்டாம், மேலும் தடைசெய்யப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் எந்த ஆலைக்கும் அனுமதி கிடையாது.
எனவே கழக தலைவர், நமது முதல்வரின் தலைமையில் அனைவருக்குமான திராவிட மாடல் அரசுக்கு தொடர்ந்து பேராதரவு தந்திட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.




Comments