வடமாநிலத்தவர் வருகை! தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் சிதைவுக்கு வழிவகுக்கும்! சுப.வீ.அறிக்கை!!
- உறியடி செய்திகள்

- Jan 31, 2023
- 1 min read

தமிழ்நாட்டிலும் வடக்கு வாழ்கிறது!
பேராசிரியர் சுபவீ அறிக்கை. சமூக வலைதளங்களில் வைரல்!
இது குறித்து அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது!
சில நாள்களுக்கு முன்பு திருப்பூரில் நடைபெற்றிருக்கும் நிகழ்ச்சி பேரதிர்ச்சியையும், பெருங்கவலையையும் தருகிறது!
வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தாண்டி, இன்று தமிழ்நாட்டிலேயே வடவர்களால் தமிழர்கள் தாக்கப்படும் நிலை வந்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டில் வேலைக்கு வரும்போதே இந்த ஆபத்தை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.
இன்றைக்கு மிக வெளிப்படையாக இரண்டு இடங்களில் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களே இருப்பதைப் பார்க்க முடிகிறது. கட்டிடத் தொழிலாளர்களாக எல்லா இடங்களிலும் அவர்களே இருக்கிறார்கள்.

அதேபோல உணவகங்களில் பணியாளர்கள் அனைவரும் தமிழ் அறியாத வடநாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்னும் நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது!
இதே நிலை இன்னும் பல்வேறு கட்டங்களைத் தாண்டி, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்வைச் சிதைக்கும் காலம் வரக்கூடும் என்பதை இப்போதாவது தமிழ்நாடு உணர வேண்டும்.

ஒரே நாடு, ஒரே பண்பாடு என்று தொடங்கி, பாரதிய ஜனதா கட்சி தன் ஆட்சியில் எல்லாவற்றையும் ஒரே வடிவத்திற்கு மாற்ற முயற்சி செய்கிறது. அவற்றுள் ரேஷன் கார்டும் அடங்கும். ரேஷன் கார்டு என்பதைச் சாதாரணமாக நாம் எடுத்துக் கொண்டு விட முடியாது.
இனிமேல் எந்த ஒரு தொழிலிலும் மிகக் குறைந்த அளவைத் தாண்டி வடநாட்டினருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படக் கூடாது என்பதிலும், அவர்களுக்கான வாக்குரிமையை அவர்கள் அவர்களின் மாநிலங்களுக்குச் சென்றுதான் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது!
இப்போதும் அதைச் செய்யத் தவறினால், இனி எப்போதும் தமிழ்நாட்டை நாம் மீட்க முடியாது!
இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.




Comments