மருத்துவ சிகிச்சையில் உயரிழந்த வீராங்கனை ப்ரியாவிற்கு, எதுவும் ஈடுடாகாது!' முதல்வர் மு.க.ஸ்டாலின்...
- உறியடி செய்திகள்

- Nov 17, 2022
- 1 min read

எதுவும் கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் உயிருக்கு ஈடுடாகாது....
முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம் மிகுந்த பதிவு.....
கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என ப்ரியாவின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவிற்கு சிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக் குறைவாக இருந்ததால், ப்ரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் மிகுந்த துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்று முழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடை நீக்கம் செய்தார். இந்நிலையில், இன்று மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் வீட்டிற்கு தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்,முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்ச் சென்று அவரது குடும்பத்தினற்கு ஆறுதல் கூறினார். ப்ரியாவின்,விளையாட்டு பதக்கங்கள், பெற்ற பரிசுகளையும் பார்வையிட்டார்,

பின்னர், ப்ரியாவின்குடும்பத்திற்கு, ரூ.10. லட்சத்திற்கான காசோலை மற்றும் வீடு வழங்கும் ஆணையை வழங்கி, அவரது சகோதரர் ஒருவருக்கு அரசு வே லைஅக்கான ஆணையைதயும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
, சென்னை மாவட்ட தி.மு.கழக செயலாளர்கள்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில் குமார் ஆகியோர் உடன் சென்றனர்.......
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டிவிட்டர் பக்கதில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்........

அதில்,கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - தமிழ்நாட்டிற்கும், விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும்.
இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார்......




Comments