நவ.1.கிராமசபையில் வேளாண்மை திட்டங்கள்! விவசாயிகள் பயன்பெற அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அழைப்பு
- உறியடி செய்திகள்

- Oct 31, 2022
- 1 min read

கிராமசபை கூட்டங்களில் அரசு செயல்படுத்தும் வேளாண்மை திட்டங்கள், பயனாளிகள் விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை விவசாயிகள் பயன்பெற எம்.ஆர்.கே..பன்னீர்செல்வம் அழைப்பு.....
நவ.1.நாளை செவ்வாய்கிழமை கிராம பஞ்சாயத்துக்கள் அனைத்துகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.கழகதலைவர், தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு, வழிகாட்டுதலின்படியும், தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ,
ஆலோசனையின்படியும், நவ.1.ல்நடைபெறவுள்ள கிராம கூட்டத்தில் வேளாண்மைதுறைசார்பில் ஒவ்வெரு கிராம பஞ்சாயத்திற்கும், ஒரு பொருப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள், முக்கிய தொழில்நுட்பங்கள். இதர வேளாண் சார்ந்தஅரசு திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில், விளம்பர பதாதைகள், வைக்கப்படவும் | துண்டு பிரசூரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது..........

நடப்பு ஆண்டின், அரசின் திட்டங்களின் மூலம் பயனைடந்த விவசாயிகளின் பட்டியல் தயாரித்து, அக்.2.கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிடப்பட்டது, அதன்பிறகு வேளாண் திட்டங்கள் மூலம் பயனடையும் விவசாயிகளின் பட்டியலை நவ.1. கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே நவ.1. ம் தேதி நடைபெறும், கிராமசபை கூட்டத்தில் அனைத்து தரப்பு விவசாய - வேளாண் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் தவறாது கலந்துகொண்டு பயனடைய வேண்டுமென்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Comments