தொல்.திருமா- சீமான் கைக்கூலிகளா? மீண்டும் சர்ச்சையை கிளப்புகிறா பா.ஜ.க.எச்.ராஜா!!
- உறியடி செய்திகள்

- Nov 5, 2022
- 1 min read

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கடுமையாக, பாஜ.நிர்வாகி எச்.ராஜா விமர்சித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் முன்னாள் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழா வீரபாண்டி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவிற்கு எச். ராஜா.வருகை தந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது.........

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஆப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தீய சக்தி திருமாவளவன் யாசின் மாலிக்கின் கைக்கூலி சீமான் இருவரும் மனித சங்கிலி நடத்துவதற்கு அரசு உளவுத்துறை அறிக்கை வாங்கவில்லை.
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக எவரும் இங்கு செயல்படலாமா?
பிரபாகரன் ஆமைக் கறி ஊட்டி விட்டதாத கூறும் கோமாளியான தமிழனே அல்லாத சீமான், தமிழர்களை பற்றி பேச என்ன தகுதிஇருக்கிறது. அவரே வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர். எனவே இப்படி உளறும் கோமாளித்தனத்தை அவர் நிறுத்திக் கொள்வது நல்லது.....
இவ்வாறு எச். ராஜா கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகியான எச்.ராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது வைராலாகி வருகிறது.....
சர்ச்சைக்குரிய பேச்சையும், சமூக வலைதளபதிவுகளையும், செய்து விட்டு அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்புகளில் கேள்வியாக எழுப்பப்படும்
போது மிரட்டுவதும், மறுதலித்து,லாவகதப்பிவிட்டதாக நினைப்பதும் எச்.ராஜாவின் நடைமுறையாகிவிட்டதாகவே கூறுகின்றனர், அரசியல் பார்வையாளர்களும், விமர்சர்களும், பத்திரிக்கையாளர்களும்........
அதெல்லாம் சரி.....
யானைக்கும் அடிசறுக்குமா......
பொருத்திருந்துதான், பார்க்கவேண்டும்.....




Comments