மோடியுடன் கருத்து விரிசலா! தமிழன் தான் பிரதமர் அமித்ஷா! அதிமுகவுக்கு தமிழக பா.ஜ.க. எச்சரிக்கையா!
- உறியடி செய்திகள்

- Jun 13, 2023
- 2 min read

மணவை.எம்.எஸ்.ராஜா.....
ஜெ. ஊழல் முதல்அமைச்சர், இவரால்தான் தமிழ்நாடு ஊழல் மாநிலமானது...
அண்ணாமலைபேச்சால் அதிமுக- பாஜக, வினரின் லாவணி கச்சேரி குடு பிடித்ததா?
அடைமழை ஓய்ந்தாலும், விடாது துரத்தும் சாரல் மழை!
நடுரோட்டுக்கு வாம்மா".. அண்ணாமலையின் வலதுகரம் அமர்பிரசாத் கடுமையாக சாடி மாஜிஜெயக்குமாரை விமர்சனம்!

அண்ணாமலையின் வலதுகரம் என்று அழைக்கப்படும் பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் பதிவில்!
"நடுரோட்டுக்கு வாம்மா பேசி தீர்த்துக்கலாம் என்று பெண்களை அழைக்கும் பெருமகனார், இப்போதெல்லாம் ஊழல் என்றதும் பதறித் துடிக்கிறார். ஊழலுக்கென்றே பிறந்தவர்களுக்கு முட்டுக் கொடுத்தால் மட்டும் செய்த ஊழல் இல்லாமல் போய் விடுமா? என்று மாஜி ஜெயக்குமாரையா? விமர்சித்துள்ளார்!
தமிழக அரசியல் பயணத்தின் போது, வருங்கால பிரதமர் தமிழர் என அமித்ஷா பேசியதாக வரும் செய்தியும், அதற்க்கு விளக்கம் கூறும் வானதி சீனிவாசன் போன்றோரின் தன்னிலை விளக்க கருத்துக்களும் ஒட்டு மொத்த அரசியல் களத்தையே குழப்பியா உள்ளது!
என்கிற மக்ககளின் மைன்ட்வாய்ஸ் ஒரு பக்கம்!
ஸ்கெட்சுலே இருக்கே என்கிறே பேச்சும் மறுபக்கமோ?
'தமிழகத்தில் யார் ஊழல் செய்திருந்தாலும் எதிர்ப்போம்' என சொன்னதும், 'அது எங்களுக்கும் தானே பொருந்தும்?' என கேட்டால், உப்புத் திண்ணவன் தண்ணி குடிச்சுத்தான் ஆக வேண்டும் என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஊழலை வெளிச்சம் போட, பல்கலைக்குச் சென்று பட்டம் வாங்க வேண்டியதில்லை. கத்துக்குட்டியாக இருந்தாலும் வெளிச்சம் போடலாம் என்பதை மாஜி அமைச்சர் எப்போது உணரப் போகிறார்?" என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனும் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

முத்திருச்சே.. ஜெயலலிதா பற்றியே தப்பா பேசுறதா? அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக
தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநிலத் தலைவர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
தமிழக மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிஸ்டத்தை சரிசெய்திட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். அவர் என்றுமே உள்ளதை உள்ளபடி பேசுபவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். பதவிக்கும், பவிசுக்கும் ஆசைப்பட்டு .அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை.

பல்வேறு புதிய திட்டங்களோடு மக்கள் வாழ்வு வளம் பெறும் கனவுகளோடு அரசியலுக்கு வந்திருக்கும் அவர் என்றும் மாறப் போவதில்லை. ஜெயக்குமார் போன்றஅரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஜெயக்குமார் அவர்கள் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார்.

இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்குத் தான். உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை. தென்சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று திரு.அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டது கூட ஜெயக்குமார் அவர்களுக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகின்றேன்.
எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறிபோய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியவேலை யாருக்கும் கிடையாது. எனவே பத்திரிகை பேட்டியை திசை திருப்பி குழப்பம் செய்திட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன்.என்று கூறியுள்ள நிலையில்....
மாஜி ஜெயக்குமார். கர்நாடக தேர்தல் பொருப்பாளராக சென்ற அண்ணாமலையை கடுமையாக விமர்ச்சித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்களுக்கு பஞ்சமில்லை!

தமிழக அரசியல் பயணத்தின் போது, வருங்கால பிரதமர் தமிழர் என அமித்ஷா பேசியதாக வரும் செய்தியும், அதற்க்கு விளக்கம் கூறும் வானதி சீனிவாசன் போன்றோரின் தன்னிலை விளக்க கருத்துக்களும் ஒட்டு மொத்த அரசியல் களத்தையே குழப்பியா உள்ளது!
என்கிற மக்களின் மைன்ட்வாய்ஸ் ஒரு பக்கம்!
ஸ்கெட்சுலே இருக்கே என்கிறே பேச்சு மறுபக்கமோ?
சராம்




Comments